தனியா ரூமுக்கு வா சரக்கடிக்கலாம்.. சின்னத்திரை நடிகையை டார்ச்சர் பண்ண தயாரிப்பாளர்.. பறந்தது புகார்!

மும்பை: பிரபல சின்னத்திரை நடிகையான ஜெனிஃபர் மிஸ்ட்ரி பன்சிவால் (Jennifer Mistry Bansiwal) தான் நடித்து வந்த சின்னத்திரை தொடரை தயாரித்து வரும் தயாரிப்பாளர் மீது பாலியல் தொல்லை புகார் அளித்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.

சினிமாவில் மட்டுமின்றி சின்னத்திரை நடிகைகளுக்கும் ஏகப்பட்ட அட்ஜெஸ்ட்மென்ட் டார்ச்சர்கள் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களால் கொடுக்கப்பட்டு வருவதாக பல நடிகைகள் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

Popular Tv actress Jennifer Mistry Bansiwal raises sexual harrasment complaint against Producer

ஆனால், இது தொடர்பாக புகார் அளித்தால் அவர்களுக்கான நீதி கிடைக்குமா? என்பதில் தான் பெரிய பிரச்சனையே இருப்பதால் தான் பல நடிகைகள் அந்த கொடுமைகளை சகித்துக் கொண்டு செல்கின்றனர் என்கின்றனர்.

தயாரிப்பாளர் மீது சின்னத்திரை நடிகை புகார்: Sab டிவியில் 2008ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் Taarak Mehta Ka Ooltah Chashmah டிவி தொடரில் நடித்து வந்த பிரபல நடிகை ஜெனிஃபர் மிஸ்ட்ரி பன்சிவால் அந்த டிவி தொடரின் தயாரிப்பாளர் அசித் குமார் மோடி மீது பாலியல் தொல்லை புகார் அளித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.

Popular Tv actress Jennifer Mistry Bansiwal raises sexual harrasment complaint against Producer

தனியா ரூமுக்கு வா சரக்கடிக்கலாம்: தயாரிப்பாளர் அசித் குமார் மோடி தன்னை தனியாக ரூமுக்கு வா சரக்கடிக்கலாம் என அழைத்தார் என்றும் அடிக்கடி ஆபாசமாக பேசுவது, தவறாக தொடுவது என எல்லை மீறினார் என தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த 4 மாதத்துக்கு முன்னதாகவே அவரது நடவடிக்கைகள் பிடிக்காமல் தொடரில் இருந்து வெளியேற போகிறேன் என சொன்ன நிலையில், தனக்கு வர வேண்டிய 4 மாத சம்பளத்தை பிடித்து விடுவோம் என இணைத் தயாரிப்பாளர்கள் இருவர் மிரட்டியதாகவும் மேலும், அவர்களும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த புகாரில் நடிகை ஜெனிஃபர் குறிப்பிட்டுள்ளார்.

Popular Tv actress Jennifer Mistry Bansiwal raises sexual harrasment complaint against Producer

மான நஷ்ட வழக்கு: நடிகை சொல்வது அனைத்துமே பொய் என்று தயாரிப்பாளர் அசித் குமார் மோடி தரப்பில் இருந்து ஒரு புகாரும் மும்பை போலீசாருக்கு சென்றுள்ளது. அதில், நடிகை சரியாக ஷூட்டிங் வருவது கிடையாது என்றும் அவர் நடத்தை சரியில்லை என பேச்சுக்கள் அடிபட்ட நிலையில் தான் அவரை அந்த சீரியலில் இருந்து தூக்கினோம்.

வேலை போன விரக்தியில் இப்படி என் மீதும் என் ஷோ மீதும் அபாண்டமான பழி சுமத்தி வருகிறார். இதற்காக அவர் மீது மான நஷ்ட வழக்கும் பதிவு செய்துள்ளேன் என அசித் குமார் மோடி தெரிவித்துள்ள நிலையில், இந்தி டிவி உலகில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X