Pournami serial:ஆனந்த யாழை மீட்டிக்கொண்டே இருக்கும் மகள் பவுர்ணமி

சென்னை: சன் டிவியின் பவுர்ணமி சீரியலில் பவுர்ணமி தனது அப்பாவால் மட்டுமே சந்திக்கும் போராட்டங்கள் எத்தனை எத்தனை... ஆனால், அவளது தங்கை பவானிக்கு கிடைக்கும் அப்பாவின் பாசம்தான் எத்தனை உண்மை.

சக்ரவர்த்தி பெரிய தொழிலதிபர், இவரின் முதல் மனைவி வசந்தி, பவுர்ணமியை பிரசவிக்கும் போது எதிர்பாராத விதத்தில் இறந்து விடுகிறார். இதற்கு அவள் பெற்றடுத்த பெண் குழந்தைதான் காரணம் என்று, அந்த குழந்தையை பார்க்கக்கூட இல்லை சக்ரவர்த்தி,

பவுர்ணமி அதிர்ஷடம் கெட்டவள், அவளை பார்த்துட்டு போற காரியம் உருப்படாது. மொத்தத்தில் அவள் பிறந்தது தனக்கு எதிரான சதிகளை செய்யத்தான் என்பதில் சக்ரவர்த்தி மிக உறுதியாக இருக்கார்.

இரண்டாவது மனைவி

இரண்டாவது மனைவி

இரண்டாவதாக ஏழைப் பெண்ணான வாசுகியை மனத்துக்கொள்கிறார். இவர்களுக்கு பிறந்த பெண்தான் பவானி.பவானி என்றால் சக்ரவர்த்திக்கு உயிர்.ஆனால்,சித்தி, பவானி, பாட்டி மூவருமே பவுர்ணமியின் மேல் ரொம்ப பாசமாகத்தான் இருக்காங்க. அதுவும் சக்ரவர்த்திக்குத் தெரியாமல்தான் இவர்கள் பவுர்ணமியுடன் பேச முடியும்.தெரிந்தால் மனிதர் கோபப்படுவார். பாட்டி மட்டும்தான் பவுர்ணமிக்கு சக்ரவர்த்தி முன்னால் பேசலாம்.

பவுர்ணமியின் சித்தி வாசுகியை

பவுர்ணமியின் சித்தி வாசுகியை

பவுர்ணமியின் சித்தி வாசுகியை வயசு காலத்தில் அடைய நினைத்த ரவுடி சோனு. ஆனால், அவனிடமிருந்து தப்பித்து, இன்று நல்ல வாழக்கை வாழ்வதைத் தெரிந்துகொண்டான்., மறுபடியும் வாசுகியை அடைய அவளை வீட்டுக்கே வந்து மிரட்டறான், தன் அம்மாவுடன் சேர்ந்து. இதைச் தெரிஞ்சுக்கிட்ட பவுர்ணமி அவங்க வீட்டுக்கே போயி சோனுவை மிரட்ட, இப்போது பவுர்ணமி மேல ஆசை வந்துருது சோனுவுக்கு.

சதவிகிதம் ஷேர் ஹோல்டர்

சதவிகிதம் ஷேர் ஹோல்டர்

சோனு, சக்ரவர்த்தியின் தொழிலில் நாற்பது சதவிகிதம் ஷேர் ஹோல்டராகி, சக்ரவர்த்தியை தினமும் டென்சன் படுத்தறான். பவுர்ணமியை கல்யாணம் செய்து கொடுத்தால் தொழிலில் இருந்து விலகிக்கறதா சொல்ல, பவுர்ணமியை சோனுவுக்கு கல்யாணம் செய்துவைக்க சம்மதிக்கறார் சக்ரவர்த்தி. என்ன கொடுமை பாருங்கள், தான் தொழிலில் சாதிக்க பெத்த பொண்ணையே ரவுடிக்கு கல்யாணம் செய்து வைக்க சம்மதிக்கிறார். ஆனால், பவானிக்கு பவுர்ணமியை காதலித்த ஸ்மார்ட் ராம்கியை கல்யாணம் செய்து வைக்க நினைக்கிறார்.

சோனுவின் ஷேர் இப்போது

சோனுவின் ஷேர் இப்போது

சோனுவின் ஷேரை அவன் திரும்ப பெற்றுக்க பவுர்ணமிதான் காரணம்னு ஆஃபீசில் சொல்ல, சக்ரவர்த்திக்கு சந்தோஷத்துக்கு பதில்,கோபம் வருது வீட்டில் வந்து கத்தறார். பெரிய இவளா நீ என் பிரச்னையை என்னால் முடிச்சுக்கத் தெரியாதா.. அங்கே வந்து உன் பவர் என்னன்னு காமிக்கிறியான்னு கத்தறார். பாவம் பவுர்ணமி, பிறந்ததில் இருந்தே இப்படி அப்பாவால் பல பிரச்சனைகள்.

ஆனாலும், அவள் தனது அப்பாவுக்கு மட்டும் எப்போதும் ஆனந்த யாழைத்தான் மீட்டிக் கொண்டு இருக்கிறாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X