Pournami serial: பவுர்ணமியை சோனுக்கு கல்யாணம் செய்யறதா? என்ன அப்பா இவர்?
சென்னை: சன் டிவியின் பவுர்ணமி சீரியலில் பவுர்ணமிக்கு அப்பா மீது கொஞ்சமும் கோவம் வராதது ஏன் என்றுதான் தெரியவில்லை.
அப்பா சக்ரவர்த்தி பெரும் தொழிலதிபர். இவருடைய முதல் மனைவி வசந்தி பிரசவத்தின் போது இறந்துவிடுகிறார்.
அப்போது பிறந்த பெண் குழந்தைதான் பவுர்ணமி. இவ பிறந்தது தனக்கு ராசி இல்லை என்று அப்போதே சக்ரவர்த்தி மனதில் ஆழப்பதிந்து விடுகிறது.

சித்தி வசந்தி
சக்கரவர்த்திக்கு சந்தர்ப்ப வசத்தால் இரண்டாவது மனைவியாக வாசுகி அமைக்கிறார். இவரை அடைய துடித்தவன்தான் அந்த சோனு. இது சக்ரவர்த்திக்குத் தெரியாது., வாசுகியை காணவில்லை என்று மன நிலை சரியில்லாமல் இருந்த சோனுவுக்கு, வாசுகியின் முகவரி மீண்டும் கிடைத்ததில் சுய நினைவு வந்துருது.

வாசுகியை சோனு
சோனு வாசுகியை அடைய அவள் வீட்டுக்கே வந்து மிரட்டிட்டு போறான். இதை பார்த்த பவுர்ணமி சோனுவை போயி மிரட்டிட்டு வர்றா. பவுர்ணமிக்குப் பிறகு வாசுகிக்கும், சக்கரவர்த்திக்கும் பிறந்த பெண்ணான பவானி மீது சக்கரவர்த்திக்கு அதிக பாசம்.பவுர்ணமியுடன் கட்டிய மனைவி கூட பேசக் கூடாதுன்னு கட்டளை போட்டு இருக்கார்.

பவானி ராம்கி
அப்பா இல்லாத நேரத்தில் மட்டும் சித்தி பவுர்ணமியுடன் பேசுவாங்க. குழந்தையில் இருந்து பவுர்ணமியை பாட்டியும் சித்தியும்தான் வளர்க்கின்றனர். பவானிக்கு அக்கா பவுர்ணமி மீது பாசம் அதிகம். இப்போது தான் காதலிச்ச ராம்கியையும் பவானிக்காக விட்டுக் கொடுத்துட்டா பவுர்ணமி. அப்பா சக்ரவர்த்தி தன்னை எப்படித் திட்டினாலும் அவர் மீது கொஞ்சமும் கோபப்படக்கூட மாட்டாள் பவுர்ணமி. அப்பான்னா அவ்வளவு பாசம் .

சக்ரவர்த்தி சோனு
சோனு வயசானவன், ரவுடி..ஆனால்,எப்படியோ சக்ரவர்த்தி கம்பெனியில் 40 சதவிகிதம் ஷேர் வாங்கிடறான்.இதை வைத்து சக்ரவர்த்தியை அவன் அவமானப் படுத்த, இதை என்னால சகிச்சுக்க முடியாதது என்று குமுறுகிறார் சக்ரவர்த்தி. உனக்கு கஷ்டமா இருந்தா உன் மகள் பவுர்ணமியை எனக்கு கல்யாணம்பண்ணி வச்சிரு. நான் கம்பெனியை விட்டு விலகிக்கறேன்னு சொல்றான். சக்ரவர்த்தியும் கண்டிப்பா விலகிடுவியான்னு கேட்டு, சரி கல்யாணம் செய்து வைக்கிறேன்னு சொல்றார்.
என்ன அப்பா இவர்? இவருக்கு உண்டான குழந்தை பிறந்து, இவருக்கு ராசி இல்லாமல் பண்ணிடுதாம்.. சரி, அவன் கெட்டவன் என்று தெரிஞ்சும் அவனுக்கு பவுர்ணமியை கல்யாணம் செய்து வைக்க மட்டும் எப்படி,எங்கிருந்து அவள் மீது உரிமை வந்தது?


Click it and Unblock the Notifications











