இவ்ளோ அப்பாவியாக இருக்காளே பவுர்ணமி...!
சென்னை:சன் டிவியின் பவுர்ணமி சீரியல் தெலுங்கு மொழி மாற்று சீரியல். தொழிலதிபர் சக்ரவர்த்தியின் முதல் தாரத்து மகள்தான் பவுர்ணமி.
பவுர்ணமி பிறந்த அடுத்த நொடி மனைவி இறந்து விட்டதால் சக்ரவர்த்திக்கு பவுர்ணமியை கண்டாலே ஆகாது.எப்போதும், அவளை வெறுத்து ஒதுக்குவார்.
பவுர்ணமியை காதலிக்கும் ராம்கியை பவுர்ணமியின் தங்கச்சி அதாவது சக்ரவர்த்தியின் ரெண்டாம் தாரத்து மகள் பவானி காதலிக்கறா.. அப்பா சம்மதத்தோடு நாளைக்கு பவானிக்கும் ராம்கிக்கும் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கு.

வேண்டாம் பவுர்ணமி
நாளைக்கு நடக்க இருக்கும் பவானியின் நிச்சயதார்த்தத்துக்கு பவுர்ணமி இருக்கக் கூடாது என்று கட்டளையிடுகிறார் சக்ரவர்த்தி.பவுர்ணமி தோழி வீடு அல்லது ஹாஸ்டலில் இரண்டு நாட்கள் தங்கிக் கொள்வதாக சொல்லி, பவுர்ணமி வீட்டை விட்டு கிளம்பிடறா.

பவுர்ணமியை ராம்கி
பெட்டியுடன் நடந்து சென்றுகொண்டு இருந்த பவுர்ணமினியைப் பார்த்து, ராம்கி தன் வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வர்றான். இதுவரைக்கும் ராம்கிதான் தன் தங்கை பவானிக்கு பார்த்து இருக்கும் மாப்பிள்ளை என்று பவுர்ணமிக்கு தெரியாது.

பெற்றோர் ராம்கி
ராம்கியின் பெற்றோரிடம் அவ ரெண்டு நாளைக்கு இங்கதான் இருப்பா.அவகிட்ட ஏதாவது சொன்னீங்க... இந்த வீட்டை விட்டு போயிருவேன்னு சொல்லிட்டு ராம்கி போயிடறான்.பவுர்ணமி..என் வீட்டில் ஒரு விஷேசம் நடக்குது.அப்போநான் வீட்டில் இருக்கக் கூடாதுன்னுதான் வெளியில போனேன்.

என்னை ராம்கிதான்
என்னை ராம்கிதான் இங்க அழைச்சுகிட்டு வந்துட்டான்.. என்னால உங்களுக்கு எந்த தொந்திரவும் இருக்காது.நான் எதாவது தப்பு பண்ணி இருந்தா மன்னிச்சுருங்கன்னு சொல்லிட்டு பவுர்ணமி அழறா.
நிஜமா பிறந்த நொடியிலிருந்து தன்னை வெறுக்கும் அப்பாவை பவுர்ணமி இன்னும் பாசமாக நேசிப்பது பெத்த பொண்ணுங்களுக்கே உரித்தான பாச குணம் போலும்!


Click it and Unblock the Notifications











