பிக்பாஸ் வீட்டில் பிகில் ஷுட்டிங்கா? தீயாய் பரவும் அந்த மேட்டர்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் பிகில் படத்தின் ஷுட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.
நடிகர் விஜய் இயக்குநர் அட்லி கூட்டணியில் மூன்றாவதாக உருவாகும் படம் பிகில். இப்படம் நடிகர் விஜயின் 63வது படமாகும்.
இந்தப்படத்தின் முதல் லுக் கடந்த 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது. இரண்டவது லுக் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அன்றிரவு 12 மணிக்கு வெளியிடப்பட்டது.

படத்தின் பெயர்
மூன்றாவது லுக் கடந்த சனிக்கிழமை மாலை வெளியானது. பொதுவாக படத்திற்கு பூஜை போடும் போதே படத்தின் பெயர் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு விடும்.

டபுள் ஆக்ஷன்
ஆனால் நடிகர் விஜயின் 63வது படமான பிகில் படத்தின் பெயர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில்தான் தெரிய வந்தது. இந்தப்படத்தில் நடிகர் விஜய் இரண்டு கெட்டப்புகளில் நடிக்கிறார்.

பிகில் வில்லன்
இந்நிலையில் படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அதாவது பிகில் படத்தில் வில்லனாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தான் நடிக்கிறார்.

பிக்பாஸ் வீட்டில் ஷுட்
பவர் ஸ்டார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதால் அவர் நடிக்கும் காட்சிகளை பிக்பாஸ் வீட்டிலேயே ஷுட் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த செய்தி உண்மையா அல்லது ஹேட்டர்ஸின் லந்து வேலையா என்பது உறுதியாகவில்லை.

பவர் ஸ்டால் இல்லையே
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டிற்குள் நேற்று 15 போட்டியாளர்கள் சென்றுள்ளனர். ஆனால் அவர்களில் பவர் ஸ்டார் இடம்பெறவில்லை. ஆனால் பிக்பாஸில் நிச்சயம் பவர் ஸ்டார் பங்கேற்பார் என்ற தகவல் கடந்த ஒரு வாரமாகவே பரவி வந்தது.

இனிமே தான் வருவாரோ?
அதேநேரத்தில் நிகழ்ச்சியின் முடிவில் தன்னிடம் 17 கார்டுகள் உள்ளன என்று கூறிய கமல் மற்ற 2 போட்டியாளர்கள் இடையில் வருவார்கள் என்று கூறினார். ஒரு வேளை அந்த 2 பேரில் ஒருவர் பவர் ஸ்டாரோ..? பொறுத்திருந்து பார்ப்போம்..!


Click it and Unblock the Notifications











