பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!

By Mayura Akilan

Srinivasan vs Gobinath
பேஸ்புக், இணையதளம், ப்ளாக்ஸ் என எதை பார்த்தாலும் ஒரே பவர்ஸ்டார் மயம்தான். 'பவர்ஸ்டார்' பெயரை தேடுபொறியில் போட்டாலே டிராபிக் ஆகும் அளவிற்கு ஒரே நாளில் புகழின் உச்சிக்கு ! சென்று விட்டார் அவர். அப்படி என்ன செய்து இப்படி ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார் பவர்ஸ்டார் என்று கேட்கிறீர்களா? அதிகமில்லை ஜென்டில்மேன். ஒரே ஒரு நாள் 'நீயா நானா' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றதுதான் அவர் செய்த காரியம். இது எல்லோரும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிதானே? இதில் அப்படி என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா?

போலி கவுரவம் பற்றி பேசப்பட்ட அந்த நிகழ்ச்சியில் வழக்கம்போல கோட் போட்ட கோபிநாத் சிறப்பு விருந்தினராக வந்த பவர்ஸ்டார் சீனிவாசனை கேள்வி மேல் கேட்டார்.

போலி கவுரவம் அவசியமா? என்ற கேள்விக்கு பதில் கூறிய சீனிவாசன், எனக்கு போலி கவுரவத்தில் நம்பிக்கை இல்லை என்றார். உடனே அடுத்த தாக்குதலை தொடுத்த கோபிநாத் அப்புறம் எதற்கு கேமராவுடன் 11 பேர் கொண்ட குழுவாக வருகிறீர்கள் என்று கேட்டார்.

பவர்ஸ்டார் அதற்கெல்லாம் சளைக்கவில்லை. நான் இதை விரும்பாவிட்டாலும் என்னுடைய ரசிகர்கள் இதை விரும்புகிறார்கள். அதனை என்னால் தடுக்க முடியாது என்று கோபிநாத் வீசிய பந்தை சிக்சருக்கு மாற்றினார் சீனிவாசன்.அவருக்கு 50 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்களாம். அதற்காகவே கலை சேவை செய்ய வந்ததாக கூறினார் பவர்ஸ்டார்.

நீங்கள் டாக்டராகவே இருந்திருக்கலாமே? ஏன் நடிக்கவந்தீர்கள் என்ற கோபிநாத்தின் கேள்விக்கு பதிலளித்த சீனிவாசன், இதில்தான் புகழ் கிடைக்கிறது அதனால்தான் நடிக்க வந்தேன் என்றார். அவர் சொல்வதும் நியாயம்தான் !

இன்னொரு விருந்தினராக வந்திருந்த செல்வ புவியரசு என்பவர் கோபி ஏற்பாடு செய்த ஆள் போலவே பேசினார்.பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு கலை குறித்த அடிப்படை அறிவே இல்லை என்று அவரை அவமானப்படுத்தினார். அத்தனை தாக்குதல்களுக்கும் பவர்ஸ்டார் கன்னியமாகவே பதில் அளித்தார்.முதலில் போலி கவுரவம் வேண்டாம் என்று சொன்னவர் பின் போலி கவுரவம் வேண்டும் என முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிந்தோ தெரியாமலோ அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கோபிநாத், உங்க சொந்த முகத்தை மக்களுக்கு காட்ட நினைக்கிறேன் என்று திரும்ப திரும்ப கூறிவிட்டு கடைசியில் தன்னுடைய சொந்த முகத்தை லட்சோபலட்சம் ரசிகர்களுக்கு காட்டிவிட்டார் என்றே தெரிகிறது. இதில் ஒரு விசயம் என்னவென்றால் நேற்றுவரை கோபிநாத்தின் ரசிகர்களாக இருந்த பலரும் இந்த நிகழ்ச்சியை பார்த்த பின்னர் பவர் ஸ்டார் சீனிவாசனின் ரசிகர்களாக மாறிவிட்டதாக இணையதளத்தில் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

பத்து பதினைஞ்சு நிகழ்ச்சியில பேசுனவங்க எல்லாம் பேசாம இருக்கிறப்ப ஒரே ஒரு நிகழ்ச்சியில பேசி ஓஹோன்னு பேர் வாங்கிட்டு போயிட்டார் பவர் ஸ்டார் ( இதை சந்தானத்தின் வாய்ஸ்ல படிக்கவும்).

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X