பவர்ஸ்டார் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ‘சூப்பர் குடும்பம்’

சென்னை: சன்டிவியில் வாரந்தோறும் சனி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி 'சூப்பர் குடும்பம்'. இந்நிகழ்ச்சியில், அத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிப்பவர்கள் தங்களது ஆடல்,பாடல் என தனித் திறமைகளை அரங்கேற்றுவார்கள்.

இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக நடிகைகள் மீனா, சங்கீதா மற்றும் விஜய டி.ராஜேந்தர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சில வார நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிப்பார்கள்.

அந்தவகையில் இந்தவாரம் பவர்ஸ்டார் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை மேலும் கலகலப்பாக்கினார்.

அதாச்சு ஆறுமாசம்...

அதாச்சு ஆறுமாசம்...

நிகழ்ச்சி தொடங்கும் போதே, கடந்த ஆறுமாதங்களுக்கு முன்னர் ( அதாவது பவர் ஜெயிலுக்கு போவதற்கு முன்னால்...) இதே நிகழ்ச்சியில் தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதை நினைவு கூர்ந்தார் பவர்ஸ்டார்.

இதற்குத் தானே அசைப்படுகிறேன்....

இதற்குத் தானே அசைப்படுகிறேன்....

அதேபோல், நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே தாங்கள் இருவரும் பவரைக் கலாய்க்கப்போவதாக முனனுமதி வாங்கிக் கொள்ள, பவரும் முழு மனதோடு ‘இதற்குத் தானே வந்திருக்கிருக்கிறேன்' என அனுமதி வழங்கினார்.

தன்னைப்பற்றி

தன்னைப்பற்றி

போட்டியாளர்களின் நடனங்களை ரசித்த பவர்ஸ்டார் தன்னுடைய படக்கள் பற்றிய தகவல்களை இடையிடையே பகிர்ந்து கொண்டார்.

கெட்டப் நாயகன்....

கெட்டப் நாயகன்....

அதில், ஐ படத்தில் இரு வேடத்தில் சந்தானத்துடன் நடித்துள்ளதாகவும், யாயா படத்தில் ஏழு கெட்டப்பில் வருவதாகவும், மற்றொரு படத்தில் பத்தரை (இப்படித் தாங்க பவர் சொன்னாரு....)கெட்டப்பில், ஏழு ஹீரோயின்களுடன் நடித்துள்ளதாகவும் தெரிவித்தார் பவர்.

சிம்பு என் தம்பி....

சிம்பு என் தம்பி....

இயக்குநர் ஷங்கரை தன் தம்பி என குறிப்பிட்ட பவர், சந்தானம் தான் தன் முதல் தம்பி எனவும், அதற்கு அடுத்த இடம் சிம்புவிற்கும் என தெரிவித்தார்.

பவர் பஞ்ச்....

பவர் பஞ்ச்....

சூப்பர்ஸ்டார் போல தன் படத்திலும் பஞ்ச் வைக்கும் பவர், சாம்பிளுக்கு ஒரு டயலாக்கை எடுத்து விட்டார். அதில், ‘கொலை கொலையா முந்திரிக்கா, பவரைத் தொட்டா கத்தரிக்கா' என சூப்பர் டயலாக்கை பேசினார்.

கவித கமெண்ட்...

கவித கமெண்ட்...

தங்கமீன்கள் பாடல் ஒன்றிற்கு ‘பிள்ளை நிலா' குடும்பத்தினர் ஆட, அவர்களின் நடனத்தை குறித்து ஒன்றுமே கூறாமல், அப்பாடலாசிரியைப் புகழ்ந்து வழக்கம் போல் ‘கவித..கவித..' என கமெண்ட் கொடுத்தார் பவர்.

ரெண்டு பேருக்கும் லடாயா..?

ரெண்டு பேருக்கும் லடாயா..?

ஆர்யா சூர்யா படத்தில் பவர் ஆட வேண்டிய பாடலுக்கு நடனமாடிய டி.ஆர் ஏனோ நிகழ்ச்சி முடியும் வரை உர் என்றே அமர்ந்திருந்தார். தப்பித் தவறிக்கூட பவரைப் பார்த்து புன்னைக்கவும் இல்லை, ஒரு வார்த்தை பேசவும் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X