பிரபுதேவா, நீதுசந்திரா, லட்சுமி ராய் அசத்திய ‘டான்ஸ் தமிழா டான்ஸ்’

By Mayura Akilan

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 'டான்ஸ் தமிழா டான்ஸ்' நடனப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசினை தட்டிச் சென்றுள்ளார் சந்தோஷ்.

சிம்ரன் தயாரித்து வழங்கும் நிகழ்ச்சியான டான்ஸ் தமிழா டான்ஸ் நடனப் போட்டி நிகழ்ச்சியில் இறுதிச் சுற்றில் நடனப்புயல் பிரபுதேவா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார்.

கோலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள் கண்ணைப் பறிக்கும் உடையணிந்து நடனமாடி ரசிகர்களை குஷிப்படுத்தினர்.

மாபெரும் நடனப்போட்டி

மாபெரும் நடனப்போட்டி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு டான்ஸ் தமிழா டான்ஸ் நடனப் போட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவருகிறது.

இறுதிச்சுற்றில் 4 பேர்

இறுதிச்சுற்றில் 4 பேர்

தமிழகம் முழுவதும் பல நடனக்கலைஞர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் பலவித சுற்றுக்கள் முடிவடைந்தன. இறுதிச் சுற்றில் ஆதித்யா, பிரியம், ப்ளாக் மற்றும் சந்தோஷ் ஆகிய நால்வர் பங்கேற்றனர்.

பிரபுதேவா

பிரபுதேவா

நடனப் புயல் பிரபு தேவா இறுதிப் போட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். போட்டி நடைபெறும் இடத்திற்கு பிரபுதேவா நுழைந்த உடன் அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

உற்சாக பரிசு

உற்சாக பரிசு

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார் பிரபுதேவா. சந்தோஷ் முதல் பரிசினை பெற்றார். ப்ளாக் இரண்டாம் பரிசும், ஆதித்யா மூன்றாம் பரிசும் பெற்றார். ப்ரியம் ரன்னர் அப் பரிசினை தட்டிச் சென்றார்.

நீது சந்திரா

நீது சந்திரா

கன்னித்தீவு பொண்ணா புகழ் நீது சந்திராவின் நடனம் பார்வையாளர்களை குஷி படுத்தும் விதமாக அமைந்திருந்தது.

லட்சுமி ராய்

லட்சுமி ராய்

கவர்ச்சி நாயகி லட்சுமி ராய், விளையாடு மங்காத்தா பாடலுக்கு நடனமாடி அசத்தினார்.

ஆர்த்தி – ஆனந்தி

ஆர்த்தி – ஆனந்தி

நடனப் போட்டியை காமெடி நடிகர் பாலாஜி, காமெடி நடிகை ஆர்த்தி, நடனமங்கை ஆனந்தி தொகுத்து வழங்கினார்கள்.

சிம்ரனின் அசத்தல்

சிம்ரனின் அசத்தல்

சிம்ரனின் நடனத்தை சினிமாவில் பார்த்து ரசித்த ரசிகர்கள் முதன் முறையாக நேரடியாக மேடையில் கண்டு ரசித்தனர்.

சிம்ரன் – பிரபுதேவா

சிம்ரன் – பிரபுதேவா

நடிகை சிம்ரனுடன் சினிமாவில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ளார். சிம்ரன் நடித்த பல படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். அந்த நட்பின் அடையாளமாகவே சிம்ரனின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் பிரபு தேவா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X