ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட காதலி: இது தான் மகத்தின் பட்டப்பெயரா?
Recommended Video

சென்னை: மகத்தின் காதலி பிராச்சி மிஸ்ரா தனது காதலருக்காக ஸ்பெஷலாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனக்கும், யாஷிகாவுக்கும் இடையேயான உறவு நட்பையும் தாண்டியது என்று மகத் ஒப்புக் கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் மகத் மீது காதல் ஏற்பட்டதாக யாஷிகா கமல் ஹாஸனிடம் தெரிவித்தார்.

பிக் பாஸ் 2 வீட்டில் இத்தனை நடந்தும் மகத் மீது இன்னும் நம்பிக்கை வைத்துள்ளார் அவரது காதலியான பிராச்சி மிஸ்ரா. எதுவாக இருந்தாலும் நேரில் பேசிக் கொள்ளலாம் என்று உள்ளார் அவர்.
இந்நிலையில் அவர் மகத்தை பிரிந்து இருப்பதால் ரொம்ப ஃபீல் பண்ணி வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மகத்துடன் பார்ட்டிக்கு சென்ற இடத்தில் எடுத்த வீடியோவை வெளியிட்டு பிராச்சி கூறியிருப்பதாவது,
சுமார் 60 நாட்களாகிவிட்டது. என்னை தனியாக விட்டுச் சென்றதற்கு மரியாதையாக வந்து மன்னிப்பு கேள். உன்னை மிஸ் பண்ணுகிறேன் மகத். அந்த வீட்டில் இன்னும் இருப்பதை பார்த்து மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. மிஸ் யூ மங்கி என்று தெரிவித்துள்ளார்.
அப்ப மகத்திற்கு பட்டப் பெயர் குரங்கா பிராச்சி?


Click it and Unblock the Notifications











