“கவினை ஏன் அறைந்தேன் தெரியுமா?”.. முதன்முறையாக உண்மையைச் சொன்ன நண்பர் பிரதீப் ஆண்டனி!

கவினை அடித்தது தொடர்பாக பிரதீப் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 82 : Kavin friend visit BB House

சென்னை: பிக் பாஸ் வீட்டில் கவினை கன்னத்தில் அறைந்ததற்கான காரணத்தை கூறியிருக்கிறார் நடிகர் பிரதீப் ஆண்டனி.

பிக் பாஸ் வீட்டில் இம்முறை சர்ச்சை போட்டியாளர் என்றால் அது கவின் தான். சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ஏற்கனவே மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கவின். அச்சீரியலிலேயே கவின் ஜாலியான கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார். பிக் பாஸ் வீட்டிலும் சக போட்டியாளர்களிடம் அவர் ஜாலியாகவே பேசி வருகிறார்.

ஆனால், ஆரம்பத்தில் இருந்தே காதல் பிரச்சினைகளில் சிக்கி தன் பேரைக் கெடுத்துக் கொண்டார். சாக்‌ஷியைக் காதலிப்பது போல் நடித்து ஏமாற்றியதாக இவர் மீது பழி கூறப்பட்டது.

கவினின் நண்பர்

கவினின் நண்பர்

தற்போது லாஸ்லியாவுடனான அவரது காதலும் பெரும் விமர்சனத்திற்கு ஆளானது. லாஸ்லியாவின் பெற்றோர் வருகையால் அந்தக் காதல் முடிவுக்கும் வந்துவிட்டது. இந்நிலையில், பிரீஸ் டாஸ்க்கில் கவினைப் பார்க்க அவரது தந்தை வருவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

வாதம்

வாதம்

ஆனால், அதற்குப் பதிலாக அவரது நண்பர் பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார். அருவி படம் மூலம் பிரபலமான அவர், கவினுடைய செய்கைகள் குறித்து தனிமையில் எடுத்துக் கூறினார். ஆனால் வழக்கம் போலவே அவரிடமும் கவின் தான் செய்வது தான் சரி என வாதிட்டார்.

காரணம் இது தான்

காரணம் இது தான்

இறுதியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டிய தருணம் வந்தபோது, கவினை பிரதீப் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அதற்காக அவர் பல காரணங்களைக் கூறினார். ஆனால் அவற்றில் முக்கியமானது வெளியில் உள்ளவர்களை ஏமாற்றி விட்டார் என பிரதீப் கூறியது தான்.

அம்மாவுக்காக

அம்மாவுக்காக

அப்படி பிரதீப் குறிப்பிட்டது கவினின் அம்மாவைப் பற்றித் தானாம். இதனை பேட்டி ஒன்றில் அவரே கூறியுள்ளார். ‘கவினின் அம்மா எனக்கும் அம்மா மாதிரி தான். எல்லோரிடமும் நன்றாக அன்பாக பழகுவார். தற்போது சிறைக்கு சென்றுள்ள அவரை, கவினின் நடவடிக்கையால் பலரும் மோசமாகத் திட்டுகின்றனர்.

கோபம்

கோபம்

தேவையில்லாமல் தன் தாய்க்கு இப்படி ஒரு அவப்பெயரை வாங்கிக் கொடுத்து விட்டாரே. அந்தக் கோபத்தில் தான் அவரை அடித்தேன். தற்போது கவினின் அம்மா வெளியில் எப்படி இருக்கிறார் என்பது அவருக்குத் தெரியாது' என பிரதீப் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X