16 லட்சம் பொட்டியைத் தூக்கி வெளியேறிய பூர்ணிமா ரவி.. பிரதீப் ஆண்டனி கலாய் ட்வீட்டை பாருங்க!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் 96 நாட்கள் இருந்து விக்ரம், நிக்சன் உள்ளிட்டவர்களை வெளியே அனுப்பிய பூர்ணிமா ரவி பணபெட்டியின் மதிப்பு உயர்ந்த உடனே டைட்டிலை மாயா எடுத்துக் கொள்ளட்டும் நாம் 16 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக் கொள்வோம் என மங்காத்தா பாணியில் டீலிங் போட்டு மாஸாக வெளியேறிவிட்டார் என பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வரும் நிலையில், ரெட் கார்டு வாங்கி வெளியேறிய பிரதீப் ஆண்டனி பூர்ணிமா ரவி பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு சென்றதை ட்ரோல் செய்துள்ளார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7ல் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்கிற செங்கொடி உயர்த்தப்பட்டு இந்த சீசனில் பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டதே பக்காவான ஸ்க்ரிப்டட் தான் என ரசிகர்கள் கண்டு பிடித்து விட்டனர். பிரதீப் ஆண்டனியின் வெளியேற்றத்தை வைத்தே கடைசி வரை ஷோ ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், பூர்ணிமா ரவி பணப்பெட்டியுடன் வெளியேறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Pradeep Antony trolls Poornima Ravi for lifting Money Box in Bigg Boss Tamil 7

விரைவில் கிராண்ட் ஃபினாலே: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதி வாரத்தை நெருங்கி விட்டது. பணப்பெட்டியுடன் பூர்ணிமா ரவி வெளியேறிய நிலையில், இந்த வாரம் யார் எவிக்ட் ஆவார்கள் இறுதி வாரத்துக்குள் யாரெல்லாம் செல்வார்கள் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விசித்ரா, மாயா, விஷ்ணு, மணி, தினேஷ் மற்றும் விஜய் வர்மா, அர்ச்சனா உள்ளிட்டோர் தான் இன்னமும் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இதில், கிராண்ட் ஃபினாலே வாரத்திற்குள் யாரெல்லாம் செல்வார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது. மேலும் டைட்டிலை இந்த சீசனில் பெண் போட்டியாளர் தான் வெல்வது உறுதி என்றும் கூறுகின்றனர். அர்ச்சனா, விசித்ரா மற்றும் மாயா உள்ளிட்ட 3 பெண்களில் ஒருவர் கைப்பற்றுவாரா? அல்லது தினேஷ், விஷ்ணு, விஜய் மற்றும் மணிக்கு போகுமா என்பதை வெயிட் பண்ணி பார்க்க வேண்டும்.

16 லட்சம் பணப்பெட்டி: 13 லட்சத்துடன் பணப்பெட்டியை தூக்கிக் கொண்டு விசித்ரா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக சுரேஷ் சக்கரவர்த்தி புரளியை கிளப்பி இருந்தார். ஆனால், 16 லட்சம் வந்ததும் அதை தூக்கிக் கொண்டு ஸ்மார்ட் மூவ் செய்தது பூர்ணிமா ரவி தான். வரி பிடித்தம் போக 13 லட்சம் பூர்ணிமாவுக்கு கிடைக்கும் எனக் கூறுகின்றனர்.

சம்பளம் எவ்வளவு: பூர்ணிமா பிக் பாஸ் வீட்டில் 96 நாட்கள் விளையாடிய நிலையில், ஒரு நாளைக்கு 15 ரூபாய் சம்பளம் என்கிற ரீதியில் 14 லட்சம் வரை சம்பளம் பெறுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 14 லட்சம் மற்றும் 16 லட்சம் என ஒட்டுமொத்தமாக 30 லட்சம் ரூபாயை பிக் பாஸ் வீட்டில் இருந்து சம்பாதித்த பூர்ணிமா வரி எல்லாம் போக 25 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்கின்றனர்.

பிரதீப் ஆண்டனி கலாய்: பூர்ணிமா அம்மாகிட்ட வாக்கு கொடுத்த காரணத்துக்காக அமைதியா இருக்கேன். கூலிக்கு மாறடிக்கிற கும்பல் எல்லாம் இஷ்டத்துக்கு பேசி வாயை கிளறாதீங்க, I don't play character assassination games, it's not my vibe. என ட்வீட் போட்டுள்ளார் பிரதீப் ஆண்டனி. மேலும், பொழச்சு போங்க.. உங்க பொழப்ப கெடுக்க மாட்டேன் என்றும் பதிவிட்டு தனக்கு எதிராக ரெட் கார்டு கொடுத்த பூர்ணிமாவுக்கு எதிராக எதுவும் சொல்ல மாட்டேன் என சொல்லியே பூர்ணிமாவை அசிங்கப்படுத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X