என் பொண்டாட்டியை எப்படி எட்டி உதைப்ப.. பாரு, கம்ருதீனை பொளந்த பிரஜின்.. பிக் பாஸ் வீட்டில் பூகம்பம்?
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஏகப்பட்ட சண்டைகளையும் சர்ச்சை போட்டியாளர்களையும் பார்த்துள்ளது. ஆனால், இந்த அளவுக்கு டாக்ஸிக் போட்டியாளர்களை பார்த்ததே கிடையாது என பலரும் பாரு மற்றும் கம்முவை கெட்ட வார்த்தைகளால் திட்டி வருகின்றனர். பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர்கள் முதல் இந்த சீசனில் வெளியேறியவர்கள் என பலரும் பாரு கம்முவுக்கு வழங்கப்பட்ட ரெட் கார்டை பாராட்டி வருகின்றனர்.
விஜய் டிவி மற்றும் விஜய் சேதுபதியின் பெயர் டேமேஜ் ஆகாமல் இருக்கவே இந்த ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர். இந்நிலையில், தனது மனைவி சாண்ட்ராவுக்கு ஏற்பட்ட வன்முறைக்கு எதிராக கொந்தளித்த பிரஜின் தான் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லப் போகிறேன் என்றும் தனது கையில் கம்ருதீன் சிக்கினால் அவ்ளோதான் வார்னிங் என சொல்லிவிட்டு சென்றார்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் மிகப்பெரிய பிரச்சனை வெடித்துள்ளது என்றும் பிரஜின் இருவரையும் சும்மா விடவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
எட்டி உதைத்த பாரு: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி - பாலா எல்லாம் சண்டை போட்டாலும் எகிறிக் கொண்டு தான் சண்டை போடுவார்கள். கைகலப்பு எல்லாம் நடந்ததே கிடையாது. வாய் சண்டை மட்டுமே அதிகளவில் பார்த்து வந்த பிக் பாஸ் வீடு இந்த சீசனில் ஏகப்பட்ட ஆபாச வார்த்தைகள் அடங்கிய வாய் கூசாத சண்டை முதல் எட்டி உதைக்கும் நிகழ்வு வரை நடந்து இந்த நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வெடித்துள்ளன.
பிரச்சனை பண்ண பிரஜின்: பிக் பாஸ் வீட்டுக்குள் தனது மனைவியுடன் கெத்தாக வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே சென்ற பிரஜின் உள்ளே தனது மொக்கை கேம் காரணமாக உடனடியாக வெளியே அனுப்பப்பட்டு விட்டார். ஆனால், சாண்ட்ரா தொடர்ந்து தனது விளையாட்டை கார் டாஸ்க் வரை திறம்பட விளையாடி வந்த நிலையில், அவரை எட்டி உதைத்து வெளியே அனுப்பிய நிலையில், பிக் பாஸ் வீட்டுக்கு சென்று நிகழ்ச்சி நடத்துபவர்களிடமே பிரஜின் பெரிய பிரச்சனையை செய்துள்ளார் என்றும் பாரு, கம்ருதீனை பார்க்க அனுமதிக்குமாறும் அவங்க ரெண்டு பேரை சும்மா விடமாட்டேன் என பிரச்சனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜாலியான ரீ யூனியன்: சிம்புவுக்கு பப்லுவுக்கும் இடையே நடந்த டிஆர்பி டிராமா சண்டை போல பிக் பாஸ் வீட்டில் நடக்கிறதா?? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். சில வாரங்களுக்குப் பிறகு கம்ருதீன், பாரு, சாண்ட்ரா, பிரஜின் ரீ யூனியன் போட்டோக்களை போடாமல் இருந்தால் சரி என்றும் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











