பிரஜின் குட்டீஸ்களா இது.. எவ்வளோ அழகு.. திரண்டு வந்த ரசிகர்கள்

By Velsamy

சென்னை: சீரியலில் இளம் பெண்களின் மனதைக் கவர்ந்த கதாநாயகன் தனது இரட்டை குழந்தைகளோடு பிறந்தநாளை சந்தோஷமாக கொண்டாடி பங்க்ஷனில் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டதும் இவருக்குத் திருமணம் முடிந்துவிட்டது என தெரியாமல் இருந்த இவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

சின்னத்தம்பி சீரியல் மூலமாக ரொம்பவே பிரபலமான பிரஜின் தனது காதல் மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளின் பிறந்த நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடியுள்ளார்.

குழந்தை குட்டிகளோடு இவர் வெளியிட்ட வீடியோஸ்கள் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சான்ட்ராவுடன் கல்யாணம்

சான்ட்ராவுடன் கல்யாணம்

நடிப்பவர்களும் சினிமா துறையில் இருப்பவர்களும் காதலித்து திருமணம் செய்வது ஒன்றும் புதிதல்ல ஏற்கனவே நடைபெற்றாலும் இவர்களின் திருமணம் சற்று வித்தியாசமாக தான் நடைபெற்றது . பிரஜின் மற்றும் சான்ட்ரா இவர்கள் இருவரும் தொகுப்பாளராக பணியாற்றி கொண்டிருக்கும் போது இவர்களுக்குள் ஏற்பட்ட காதலால் இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்.

காதலித்து கல்யாணம்

காதலித்து கல்யாணம்

இவர்களது திருமணத்திற்கு பிறகும் இவர்களது காதல் கொஞ்சமும் குறையாமல் இன்றுவரைக்கும் சந்தோஷமான ஒரு குடும்ப வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .சீரியல் திரைப்படங்கள் என தங்களது வேலைகளில் பிசியாக இருந்து கொண்டிருந்தனர். இதனாலேயே இவர்கள் திருமணம் முடிந்து 10 வருடங்களாக குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்தனர்.

சின்னத்தம்பி

சின்னத்தம்பி

பிரஜின் விஜய் டிவியில் காதலிக்க நேரமில்லை ,சின்னத்தம்பி என சீரியல்களில் கதாநாயகியாக கலந்துகொண்டிருந்தார் .இவரை பார்த்த இளம் பெண்கள் இந்த மாதிரி ஒரு ஆணை தான் திருமணம் செய்ய வேண்டும் என எதிர்பார்த்திருந்தனர் .அந்தளவிற்கு தன்னுடைய க்யூட்டான நடிப்பினால் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்தார்.

நடிப்பு இல்லை

நடிப்பு இல்லை

அதுபோல சான்ட்ராவும் சீரியல்களில் ஜீ தமிழில் ஒளிபரப்பான தலையணை பூக்கள் என பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். சான்ட்ரா தலையணை பூக்களுக்கு பிறகு நடிப்பதை விட்டு விட்டார். அதற்குப் பிறகுதான் தற்போது தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார் .குழந்தை பிறந்த பிறகும் இவர் நடிப்பில் இன்னும் காலடி எடுத்து வைக்க வில்லை.

அழகான டிவின்ஸ்

அழகான டிவின்ஸ்

இருந்தாலும் தனது காதல் கணவருக்கு முழு சப்போர்ட் பண்ணி கொண்டிருக்கிறார். குழந்தைகளை வைத்துக்கொண்டு முழுநேரமாக அவர்களை சமாளித்துக் கொண்டு இருப்பதே பெரிய வேலையாக இருக்கிறது என சான்ட்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கொஞ்ச நாளைக்கு முன்னாடி பதிவிட்டிருந்தார். அதற்கு பிறகு தற்போது தான் தன்னுடைய குழந்தையின் பிறந்தநாள் பங்க்ஷனை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள்.

ஆளுக்கு ஒரு குட்டி பாப்பா

ஆளுக்கு ஒரு குட்டி பாப்பா

கேக் வெட்டி ஆளுக்கு ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு இவர்கள் ஆடிய ஆட்டத்தை தான் இவர்களுடைய ரசிகர்கள் தற்போது இன்ஸ்டாகிராம் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
அதிலும் பல பெண்கள் பெண்கள் பிரஜனுக்கு இவ்வளவு அழகான மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்களா என தான் பொறாமையில் கமெண்ட் போட்டு வருகிறார்கள் .இருந்தாலும் அவர்களும் கூட தற்போது அந்த இரண்டு குட்டி செல்வங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X