விஜய் டிவியின் கோடீஸ்வர நிகழ்ச்சிக்கு வரும் புது 'செல்லம்'!
விஜய் டிவியின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி சீசன் 2 வை நடிகர் பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிவியிலிருந்து சினிமாவுக்குப் போன பிரகாஷ் ராஜ்
சினிமாவில் வில்லனாக நடித்து தனக்கென ரசிகர் வட்டத்தை பெற்றுள்ளவர் பிரகாஷ்ராஜ். சின்னத்திரை இவருக்கு புதிது அல்ல. சினிமாவில் அதிகமாக வாய்ப்பு கிடைக்கும் முன்பாக பாலச்சந்தரின் ‘கையளவு மனசு' தொடர்மூலம் நடித்து பிரபலமானார்.

மீண்டும் டிவிக்கு வருகிறார்
பின்னர் விளம்பரங்களில் நடித்து சின்னத்திரையில் நடித்தவர். இப்போது மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் அடிஎடுத்து வைக்கப்போகிறாராம்.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி - சீசன் 2
விஜய் டிவியின் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி சீசன் 2' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறார் பிரகாஷ் ராஜ் என்று சின்னத்திரை வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.

சூர்யா மறுத்தார்.. பிரகாஷ் ராஜ் வருகிறார்
‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' சீசன் 1 தொகுத்து வழங்கிய சூர்யாதான் 2வது சீசனை தொகுத்து வழங்கப்போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. மாற்றான் படத்திற்குப் பிறகு சிங்கம்-2 படத்தில் பிஸியாகிவிட்டார் சூர்யா. ஆனாலும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்திற்காக அவருடன் பேசியுள்ளனர் விஜய் டிவி குழுவினர். நீங்களும் ஆனால் அதற்கு சூர்யா மறுத்துவிட்டாராம். தவிர்க்க முடியாத சில காரணங்களால் சூர்யா வேண்டாம் என்று கூறிவிட்டதால் தென்னிந்திய மொழிகளில் பாப்புலரான பிரகாஷ்ராஜை தேர்ந்தெடுத்துள்ளது விஜய் தொலைக்காட்சி.

சிங்கத்தில் இல்லாத பிரகாஷ் ராஜ்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கினால் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்து அவரை ஒப்பந்தம் செய்துள்ளனராம். சூர்யா உடன் சிங்கம் முதல் பாகத்தில் நடித்த பிரகாஷ் ராஜ் தற்போது சிங்கம் 2 படத்தில், நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











