டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்… நடிகர் பிரசாந்த்

By Mayura Akilan

எல்லோருக்கும் டான்ஸ் ஆட பிடிக்கும். எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று நடிகர் பிரசாந்த் கூறினார். கலைஞர் தொலைக்காட்சியின் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவர் குழுவில் புதிதாக இணைந்துள்ள பிரசாந்த் தனக்கேற்ற களம் கிடைத்திருப்பதாகவும் கூறினார்.

மானாட மயிலாட சீசன் 8

மானாட மயிலாட சீசன் 8

நடன இயக்குநர் கலா இயக்கும் மானாட மயிலாட சீசன் 8 கடந்த வாரம் முதல் கலைஞர் தொலைக்காட்சியில் தொடங்கியுள்ளது. இந்த சீசனில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக சஞ்சீவ்க்கு பதில் கீர்த்தியுடன் ‘நண்டு' ஜெகன் இணைந்துள்ளார்.

கடந்த 7 சீசன்களில் இல்லாத புதுமை..

கடந்த 7 சீசன்களில் இல்லாத புதுமை..

மானாட மயிலாட 7 சீசன்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பிருந்தா தாஸ், சிம்ரன், ரம்பா, நமீதா குஷ்பு போன்ற நடிகைகள்தான் இருந்திருக்கின்றனர். இந்த சீசனில் கலா, குஷ்பு உடன் நடிகர் பிரசாந்த் நடுவராக இணைந்துள்ளார்.

டான்ஸ் ரொம்ப பிடிக்கும்

டான்ஸ் ரொம்ப பிடிக்கும்

பிரசாந்த் நன்றாக நடனமாடுவார் என்பது திரைப்பட ரசிகர்களுக்குத் தெரியும். அவரின் நடன ஆர்வத்தை தெரிந்து கொண்டதனால்தான் பிரசாந்தை நடுவராக தேர்ந்தெடுத்ததாக இயக்குநர் கலா மாஸ்டர் கூறினர். அதை ஆமோதிக்கும் விதமாக பேசிய, பிரசாந்த், எல்லோருக்கும் டான்ஸ் பிடிக்கும் எனக்கு டான்ஸ் ரொம்பப்பிடிக்கும். அதனால்தான் இந்த நிகழ்ச்சியில் நடுவராக வர ஒத்துக்கொண்டேன் என்றார்.

நமீதாவை மிஸ் பண்றாங்களேப்பா…

நமீதாவை மிஸ் பண்றாங்களேப்பா…

மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் நடனமாடிய உடன் நமீதா கொடுக்கும் கமெண்ட் பிரசித்தம். அவர் மச்சான் என்று அழைத்து போட்டியாளர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுப்பார். இந்த சீசனில் நமீதா கிடையாது என்பதால் ரசிகர்களுக்கு பறக்கும் முத்தம் கிடைக்காதே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X