வார்த்தையை கன்ட்ரோல் செய்ய முடியலனா வீட்டுக்கு போ.. இங்க என்ன வேலை பார்வதி.. விளாசி விட்ட பிரபலம்
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இந்த வாரத்தோடு 10வது வாரமாக ஒளிபரப்பட்டு வருகிறது. வேறு எந்த சீசனும் இல்லாத அளவுக்கு இந்த சீசன் தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே மோசமான சீசன் என்ற விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளது. பிக் பாஸ், பிக் பாஸ் குழுவினர், விஜய் சேதுபதி என பலரும் பல முயற்சிகளை எடுத்துப் பார்த்துவிட்டார்கள். ஆனால் அவர்களின் முயற்சிகளுக்கு எல்லாம் பிரதிபலன்கள் கிடைக்கவில்லை. போட்டியாளர்கள் மேலும் இந்த சீசனை மோசமான சீசனாக மாற்றி வருகிறார்கள். அதில் நம்பர் 1 என்ற பட்டத்தை கொடுக்க வேண்டும் என்றால் அது பார்வதிக்கு கொடுக்கலாம்.
அவரால் கடந்த 10 வாரங்களில் பிரச்னை இல்லாத வாரம் என்று சொல்ல வேண்டும் என்றால் அது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தான். அப்படி இருக்கும்போது அவரும் சக போட்டியாளர் கமருதீனும் இணைந்து கொண்டு கடந்த வாரத்தில் இருந்தே செய்து வந்த விஷயம் என்றால் அது மைக்கை மறைத்து பேசுவது தான். பிக் பாஸ், விஜய் சேதுபதி ஏன் சக போட்டியாளர்களுமே கூட இது தொடர்பாக அவர்கள் இருவரிடத்திலும் பேசிவிட்டார்கள். ஆனால் இருவரும் அதை கொஞ்சம் கூட மதிக்காமல் தொடர்ந்து அதையே செய்து வந்தார்கள். கோபமாக பிக்பாஸ் பேசியதை கேட்கும்போது, நீ, வா என்று ஒருமையில் தான் அவர் பேசவில்லை எனும் அளவுக்கு இருந்தது.
பார்வதி & கமருதீன்: இது தொடர்பாக இவர்கள் மீது இந்த வார டாஸ்க்கான கோர்ட் டாஸ்க்கில் சக போட்டியாளர்கள் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கு விசாரணை செய்யப்படும் போது கமருதீனும் பார்வதியும் தாங்கள் செய்தது தவறுதான் என்று சொன்னாலும், சக போட்டியாளர்களின் வாதங்களையும் குற்றச்சாட்டுகளையும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் முன் வைத்தனர். ஆனால் பார்வதியும் கமருதீனும் தங்கள் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்த போட்டியாளர்கள் மீது கடுமையான சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். அதன் பின்னர் FJ மற்றும் பார்வதிக்கும் இடையில் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் பார்வதி கோபத்தின் உச்சத்திற்கே சென்றார். வீட்டிற்குள் இருவருக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டது. சக போட்டியாளர்கள் இருவரையும் அமைதிப்படுத்த போராடினார்கள்.

விளாசிவிட்ட பிரபலம்: அதன் பின்னர், என்னால் இந்த வீட்டிற்குள் எனது உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை பிக்பாஸ் என்று கத்திக் கொண்டே கார்டன் ஏரியாவில் போடப்பட்டுள்ள ஷோபாவில் வந்து அமர்கிறார். தொடர்ந்து அதையே சொல்லிக் கொண்டும் இருக்கிறார். ஒரு கட்டத்தில் தற்போது இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள விமர்சகர் பிரஷாந்த் ரங்கசாமி, "கன்ட்ரோல் செய்ய முடியலனா வீட்டுக்குப் போ.. இங்க என்ன வேலை?" என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவுக்கு ரசிகர்களும் இணையவாசிகளும் பார்வதியை விமர்சித்து பலரும், பார்வதிக்கு ஆதரவாக சிலரும் பதிவிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











