பிக்பாஸில் ஷாக்! நேத்து நைட்டு என்ன நடந்துச்சு? பார்வதி - கமருதீன் குறித்து கேள்வி எழுப்பிய பிரபலம்?
சென்னை: தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் நடப்பு சீசனான 9வது சீசனைப் போல ரசிகர்களிடம் அதிருப்திகளை சம்பாதித்த சீசன் என்று எதுவும் இல்லை. அதேபோல் பிக்பாஸ், விஜய் சேதுபதி என மொத்த பிக்பாஸ் குழுவையும் பெரிய மன உளைச்சலுக்கு ஆளாக்கிய சீசன் என்று எதுவும் இல்லை. அந்த வரிசையில் மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
போட்டியாளர்கள் கமருதீன் மற்றும் வி.ஜே பார்வதி பஞ்சாயத்து வாரா வாரம் வெவ்வேறு கோணத்தில் வெவ்வேறு வடிவத்திற்கு மாறிக் கொண்டே வருகிறது. போட்டியாளர்கள் பலரும் வீட்டின் வெளியே அமர்ந்து பாடல் பாடிக் கொண்டு ஜாலியாக இரவைக் கழித்து வந்தனர். இப்படி இருக்கும்போது, பார்வதி மற்றும் கமருதீன் பெட்ரூமில் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

போட்டியாளர்கள் பாடல் எல்லாம் பாடி முடித்து தூங்கலாம் என்று படுக்கும்போது, நாய் குரைத்தது. பிக்பாஸ் வீட்டில் பகலில் யாராவது தூங்கினால் மட்டும் தான் நாய் குரைக்கும். அப்படி இருக்கும்போது இரவு நேரத்தில் நாய் குரைத்ததால் சக போட்டியாளர்களே கொஞ்சம் ஷாக் ஆகி விட்டனர். இன்னும் சொல்லப்போனால், சில போட்டியாளர்கள் பிக்பாஸ் ஏதோ விளையாட்டு காட்டுகிறார் என்று நினைத்துக் கொண்டார்கள்.
ஆட்சேபனைக்குரிய செயலா?: ஆனால் பெட்ரூமில் பேசிக் கொண்டிருந்த கமருதீன் மற்றும் பார்வதி ஏதோ ஆட்சேபனைக்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டதால் தான் நாய் குரைத்ததாக ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்களின் இந்த கருத்துக்கு ஏற்ற வகையில், கமருதீனும் பார்வதியும் பேசிக் கொள்வது ரசிகர்களின் சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது.

பிரசாந்த் ரங்கசாமி: அதாவது, அம்மா என்னை என்னவென்று நினைப்பார்கள் என்று எனக்கு தெரியவில்லை என்று பார்வதி கூறுகிறார். அதற்கு கமருதீனோ வெளியே போய் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று சொல் என்று கூறுகிறார். இந்த வீடியோவை இணையத்தில் ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக பிரபல சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தனது எக்ஸ் பக்கத்தில், " நேற்று இரவு என்ன நடந்தது? பார்வதி பார்ப்பதற்கு குழப்பமாக இருக்கிறார். இந்த களிமண்ணு கமருதீன் என்ன செஞ்சான்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார். அவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











