பாவாடை தாவணியில்.. ஒத்தைக் கையைத் தூக்கி.. சொக்கிப் போய் நிற்கும் ரசிகர்கள்!

By Velsamy

சென்னை: பாவாடை தாவணியில் ஒற்றை கையை தூக்கி கண்ணை மூடி சொக்கிப்போய் ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைக்கும் அளவில் சித்தி வெண்பா வெளியிட்டிருக்கும் போட்டோஸ்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

இதைப்பார்த்து பலபேர் இந்த மாதிரி போட்டோ பார்த்தா என்ன பண்றதுன்னு தெரியலையே புலம்பி வருகின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியல் வெண்பா கேரக்டரில் மூலமாக பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் ப்ரீத்தி சர்மா இன்ஸ்டாகிராம் அதிகமான ரசிகர்களை வைத்திருக்கிறார்.

சொக்க வைக்குதே

சொக்க வைக்குதே


ஆனாலும் ரசிகர்கள் அனைவரையும் சொக்க வைக்கிற அளவில் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் போட்டோஸ்கள் தான் வைரலாக பரவி வருகிறது. சீரியலில் ஏற்கனவே இவருக்கும் கவினுக்கும் ரொமான்ஸ் கன்னாபின்னாவென பிச்சுக்கொண்டு போய்க்கிட்டு இருக்குது இதைப் பார்த்ததும் சிங்கிள்ஸ் பலர் வயிறு எரிந்து வருகின்றனர்.

இப்படி செஞ்சா எப்படி

இப்படி செஞ்சா எப்படி

இதில் இன்ஸ்டாகிராமில் வேற இப்படி மூடு ஏத்துற மாதிரி சொக்கிப் போகிற அளவில் போட்டோஸ் போட்டா எங்க நிலைமை என்ன ஆகும் என சிங்கிள்ஸ் கம்ப்ளைன்ட் பண்ணி வருகின்றனர். சீரியல்களில் என்னதான் இளஞ்ஜோடிகள் புது கதாநாயகன் நாயகியாக நடித்தாலும் அனைவருக்குமே கெமிஸ்ட்ரி செட் ஆகி விடுவதில்லை ஆனால் தற்போது சித்தி 2 சீரியல் கவின் வெண்பா என்று சொன்னால் இளைஞர்கள் மத்தியில் ஒரு குஷி ஆகி விடுகின்றது .

சூப்பர் ஜோடி

சூப்பர் ஜோடி

அந்த அளவிற்கு இவர்கள் இருவரும் ஜோடி பொருத்தம் இளைஞர்கள் மற்றும் காதலர்கள் மத்தியிலும் சரி பின்னி பெடல் எடுத்து வருகின்றனர் .அதுவும் லேட்டஸ்டாக இவர்களின் முதல் இரவு சீன் வைத்தே ஒரு மாதத்திற்கு சீரியலை ஓட்டி விட்டாலும் இந்த சீரியலை சலிக்காமல் ரசிகர்கள் இன்னைக்காவது முதலிரவு நடந்து விடுமா என ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர் .ஆனாலும் சீரியலின் கதை ஒரு பக்கம் என்றாலும் வெண்பாவின் அழகை ரசிக்காத ரசிகர்களே இல்லை என சொல்லலாம்.

ரொம்ப அழகு

ரொம்ப அழகு

அந்த அளவிற்கு அனைவரையும் தன்னுடைய க்யூட்டான நடிப்பாலும் அழகாலும் வசியப்படுத்தி வைத்திருக்கிறார். ப்ரீத்தி சர்மா சீரியலில் நடிப்பதற்கு முன்னரே டிக்டாக்கில் பிரபலமானவர். இவரது கனவு எல்லாமே பாடகராக வரவேண்டும் என்பது தானாம் .ஆனால் நடிப்பிலும் கொஞ்சம் இருந்த ஆர்வத்தினால் டிக்டாக்கில் இவர் ரொம்பவே பிரபலமாகிவிட்டார்.

மாடலிங்கில் அசத்தல்

மாடலிங்கில் அசத்தல்

அதனால்தான் இவர் 11ஆம் வகுப்பு படிக்கும்போதே கட்ட துறைக்கு கட்டம் சரியில்லை என்னும் டிவி ஷோவில் நடித்திருக்கிறார். அதற்கு பிறகு பன்னிரண்டாம் வகுப்பிலும் மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருக்கிறார். கோயம்புத்தூர் காலேஜில் படித்துக் கொண்டிருக்கும் போது தான் இவருக்கு ஆல்பம் ஸ்டோரியில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

மறக்க முடியாத அனிதா

மறக்க முடியாத அனிதா

அதிலேயும் ரசிகர்கள் இவரை நன்றாக ரசிக்க ஆரம்பிக்கும் போது தான் இவருக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் அனிதா கேரக்டரில் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டார் .ஆனால் அதிர்ஷ்டவசமாக அவரால் தொடர்ந்து அந்த சீரியல் நடிக்க முடியவில்லை.

செல்ல மருமகள்

செல்ல மருமகள்

சித்தி 2 சீரியலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்ததால் இவரால் திருமணத்தில் கவனத்தை செலுத்த முடியவில்லை என அதிலிருந்து ஒதுங்கி விட்டார் .ஆனாலும் தற்போது சன் டிவி சீரியல் மூலமாக தமிழ் ரசிகர்களின் செல்ல மருமகளாக மாறிவிட்டார். ஆனாலும் இதுவும் போதாது எனக்கு என தற்போது இன்ஸ்டாகிராமிலும் கலக்கி கொண்டிருக்கிறார்.

பாவாடை தாவணியில் வேற லெவல்

பாவாடை தாவணியில் வேற லெவல்

சீரியலில் அடக்கமாக இழுத்துப் போர்த்திக் கொண்டு சேலையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் மாடல் உடைகளிலும் கலக்கிக் கொண்டிருந்தார் .ஆனாலும் தற்போது இவர் பாவாடை தாவணியில் வேற லெவல் போட்டோ ஷூட்டை எடுத்திருக்கிறார். இளைஞர்களால் அதிகமாக பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் களில் தற்போது இவரது போட்டோக்களும் வீடியோக்களும் தான் இருந்து வருகிறது.

பதறிப் போன ரசிகர்கள்

பதறிப் போன ரசிகர்கள்

ஆனாலும் இன்ஸ்டாகிராமில் இவர் பாவாடை தாவணியில் கன்னாபின்னாவென எடுத்து குவித்திருக்கும் போட்டோக்களை பார்த்ததும் பதறி போன இவருடைய ரசிகர்கள் இந்த மாதிரி போஸ்ட் போட்டா எங்களால நிம்மதியா தூங்க முடியுமா என செல்ல கோபப்பட்டு வருகின்றனர். இருந்தாலும் ப்ரீத்தி விடுவதாக இல்லை போலும்தொடர்ந்து அதகளம் செய்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X