பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பத்திரிக்கையாளர்கள்? சரமாரி கேள்வி.. பரபரக்கும் வீடு!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 2 : Day 100 : சாண்டி நீ வேற Level பண்ணிட்டு இருக்க-வீடியோ

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் பத்திரிக்கையாளர்கள் சென்றிருப்பது புரமோவில் தெரியவந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் பினாலே நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் சாண்டி, முகென், ஷெரின், லாஸ்லியா ஆகிய 4 பேரும் ஃபைனலிஸ்ட்களாக தேர்வாகியுள்ளனர்.

பினாலே நிகழ்ச்சியில்தான் யார் டைட்டில் வின்னர் என தெரியவரும். இந்நிலையில் பழைய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

புரமோக்கள்

புரமோக்கள்

நேற்று மோகன் வைத்யா, ஃபாத்திமா பாபு, ரேஷ்மா, மீரா மிதுன் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தனர். இந்நிலையில் இன்று கஸ்தூரி, சேரன், வனிதா, அபிராமி, சாக்ஷி ஆகியோர் வந்திருப்பது காலையில் வெளியான புரமோக்களில் தெரியவந்தது.

பத்திரிக்கையாளர்கள்

பத்திரிக்கையாளர்கள்

இந்நிலையில் இன்று வெளியான மூன்றாவது புரமோவில் பிக்பாஸ் வீட்டிற்குள் பத்திரிக்கையாளர்கள் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் போட்டியாளர்களிடம் விளையாடும் மெத்தட் குறித்து கேட்டு வருகின்றனர்.

சாண்டியின் பதில்

சாண்டியின் பதில்

சாண்டியிடம் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் என்னதான் நீங்க ஃபீல் பண்ணி அழுதாலும், கொஞ்சம் சேஃபா விளையாடுறீங்களோன்னு தோனுது என்று கேட்கிறார். அதற்கு சாண்டி, என்னை பொறுத்தவரைக்கும் ஜாலியா இருக்கனும், வெளியே எப்படி இருப்பேனோ அப்படிதான் இருக்கிறேன், அதை நீங்க ஸ்ட்ரேட்டர்ஜி என்று எடுத்துக்கொண்டாலும் சரி எப்படி எடுத்துக்கொண்டாலும் சரி என்கிறார். இப்படியாக முடிகிறது மூன்றாவது புரமோ.

மற்ற போட்டியாளர்கள்?

மற்ற போட்டியாளர்கள்?

மற்ற போட்டியாளர்களிடம் அவர்கள் என்ன கேட்கப் போகிறார்கள் அதற்கு போட்டியாளர்களின் பதில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X