»   »  பெண்களின் நிர்வாணத்திற்கு மார்க்: டேனிஷ் டிவியை எதிர்த்து போர்க்கொடி

பெண்களின் நிர்வாணத்திற்கு மார்க்: டேனிஷ் டிவியை எதிர்த்து போர்க்கொடி

By Mayura Akilan
Subscribe to Oneindia Tamil

கோபன்ஹேகன்: நடனத்திற்கு மார்க் போடும் நடுவர்களை பார்த்திருப்போம், இனிமையாக பாடும் பாடகர்களுக்கு மார்க் போடும் நடுவர்களையும், ரியாலிட்டி நிகழ்ச்சியையும் கூட பார்த்திருப்போம். ஆனால் பெண்களை நிர்வாணமாக நிற்க வைத்து அவர்களின் உடல் அமைப்பிற்கு மார்க் போடும் ஒரு ரியாலிட்டி ஷோ டேனிஷ் டிவியில் ஒளிபரப்பாகிறது.

ஆடைகள் துறந்து நடக்கும் பெண்களின் அங்கங்களை அணு அணுவாக ரசித்து மதிப்பெண்களை போடுகின்றனர் நடுவர்கள். கூடவே போட்டியில் பங்கேற்கும் பெண்களின் உடல் அமைப்பினைப் பற்றி கமெண்ட் வேறு அடிக்கின்றனர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் ப்ரைம் டைமில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி பெரும் புயலை கிளப்பியுள்ளது.

நிர்வாண மங்கையர்

நிர்வாண மங்கையர்

டென்மார்க்கைச் சேர்ந்த டேனிஷ் டிவியில், பெண்களின் உடல் அமைப்பை ரசிக்கும் ரியலிட்டி ஷோ ஒளிபரப்பாகிறது. அந்த நிகழ்ச்சியின்போது ஏராளமான பெண்கள் அணிவகுத்து வருகிறார்கள். ஒவ்வொருவரும் நடுவர்கள் முன்பு நிற்கின்றனர். பின்னர் மெதுவாக உடைகளைக் களைந்து நிர்வாணமாகிறார்கள்.

பார்வையாளர்களும் ரசிக்கலாம்

பார்வையாளர்களும் ரசிக்கலாம்

நடுவர்களின் பார்வைக்கு மட்டுமல்ல நிகழ்ச்சியை பார்க்க வந்திருக்கும் பார்வையாளர்கள் கண்களுக்கும் இந்த மங்கையர்களின் உடல் விருந்தாகிறது என்பதுதான் அவலம்.

ப்ரைம் டைம் நிகழ்ச்சி

ப்ரைம் டைம் நிகழ்ச்சி

இது இரவு 11 மணிக்கு ஒளிபரப்பானால் இதைப் பற்றி யாரும் பேசப்போவதில்லை. ஆனால் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை பார்க்கும் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகிறது.

உடல் அமைப்பிற்கு மார்க்

உடல் அமைப்பிற்கு மார்க்

ஆடை துறந்த பெண்களின் உடல் வளைவுகளுக்கு ஏற்ப மதிப்பெண்கள் கிடைக்கிறது. ஒவ்வொருவருக்கும் பாயிண்ட் அடிப்படையில் மதிப்பெண் கிடைக்கிறது.

அசிங்கமான வர்ணனை

அசிங்கமான வர்ணனை

இந்த நிகழ்ச்சியை நடத்தும் தாமஸ் பிளாச்மேன் என்பவர் ஒரு பெண்ணைப் பார்த்து, கொஞ்சம் இந்தப் பக்கம் திரும்பி நிற்க முடியுமா என்று கேட்கிறார். அதாவது அவருக்கு அந்தப் பெண்ணின் பின்பக்கத்தைப் பார்க்க வேண்டுமாம். பிறகு அப்பெண்ணின் மார்புகள் குறித்தும்அவர் அசிங்கமாக கமெண்ட் அடிக்கிறார்.

பெண்களுக்கு இழிவு

பெண்களுக்கு இழிவு

இந்த நிர்வாண ரியாலிட்டி ஷோ டென்மார்க்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் ஷோ இது என்று பலரும் வசை பாடி வருகின்றனர்.

புத்திசாலித்தனமான நிகழ்ச்சி

புத்திசாலித்தனமான நிகழ்ச்சி

ஆனால் இது ஆபாசமில்லை என்கிறார் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர். இந்த நிகழ்ச்சிக்குப் பெயர் பிளாச்மேன்தான். பிளாச்மேன் இதுகுறித்துக் கூறுகையில், மிகவும் யோசித்து இதை உருவாக்கினேன். நான் ஒரு ஜீனியஸ், முட்டாள் அல்ல என்றார்.

ஆபாசம் இல்லையாம்

ஆபாசம் இல்லையாம்

இது ஆபாசமான நிகழ்ச்சி அல்ல. பெண்களின் உடல் அழகை ஆபாசம் இல்லாமல் ரசிகர்கள் முன்பு வைத்து அதன் அழகைப் போற்றுவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சம் என்றும் சொல்கிறார் பிளாச்மேன்.

ஓடிப்போன தயாரிப்பாளர்

ஓடிப்போன தயாரிப்பாளர்

இருப்பினும் பிளாச்மேனுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. கோபக்குரல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் அவர் தற்போது நியூயார்க்குக்கு ஓடிப் போய் விட்டார்.அங்கிருந்தபடி நிகழ்ச்சியை நடத்துகிறார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    A PRIME-TIME TV show has caused outrage over the humiliation of naked women paraded in front of male 'judges'. The programme features a series of silent women who walk in to a studio and slip out of their bathrobes in front of a leering host and his guest. The pair then openly run their eye over the nude guests - and controversially judge the women on their bodies.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more