twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புலி ரசிகரா நீங்கள்? நைட் 9 மணிக்கு அனிமல் பிளானட் பாருங்களேன்

    By Mayura Akilan
    |

    புலியின் கம்பீரம் எல்லோரையும் கவரும். வேகமான ஓட்டம், வேட்டையாடுவதில் உள்ள லாவகம்... குட்டிகளை கவனிக்கும் பங்கு என சேனல்களில் தேடித் தேடி புலிகளைப் பற்றிய நிகழ்ச்சிகள் பார்ப்பதற்கு என்று ரசிகர்கள் இருக்கின்றனர்.

    இந்தியாவின் தேசிய விலங்கை கொண்டாடும் விதமாகவும் உலகெங்கும் உள்ள புலிகளை பற்றிய உண்மைக் கதைகளை பகிர்ந்து கொள்ளும் பொருட்டும் 'வேர் டைகர்ஸ் ரூல்' என்ற ஒரு மாத கால சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது, அனிமல் பிளானட் சேனல். ஏப்ரல் 1 முதல் தினமும் இரவு 9 மணிக்கு இந்த தொடரை காணலாம்.

    வேட்டையாடப்பட்ட புலிகள்

    வேட்டையாடப்பட்ட புலிகள்

    மகாராஜாக்கள், ஆங்கிலேயர்கள் ஆட்சி காலங்களில் புலிகளை வேட்டையாடுவது ஒரு வீரமான செயலாக கருதப்பட்டது. இதன்பின்னர் புலிகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் கருதி வன விலங்குகளை வேட்டையாடுதல் குற்றம் என்று சட்டம் இயற்றப்பட்டது. இதனைப் பற்றி முதல் பகுதியில் ஒளிபரப்புகின்றனர்.

    அழியும் புலிகள் இனம்

    அழியும் புலிகள் இனம்

    எனினும் 40,000த்திற்கும் மேற்பட்ட புலிகள் இருந்த இந்திய வனப்பகுதியில் இப்போது 3,000திற்கும் குறைவான அளவே புலிகள் இருக்கின்றன. அழிந்து வரும் தேசிய விலங்கான புலிகளை பாதுகாக்கவும், அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த புலிகள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

    புலிகளின் மர்ம உலகம்

    புலிகளின் மர்ம உலகம்

    இந்தியாவின் அடர்ந்த காடுகளிலும், விலங்கு சரணாலயங்களிலும் படம் பிடிக்கப்பட்டுள்ள இந்த தொடர், புலிகளின் மர்ம உலகை வெளிப்பார்வைக்கு கொண்டு வருகிறது.

    குட்டிகளுடன் வாழ்க்கை

    குட்டிகளுடன் வாழ்க்கை

    மத்தியபிரதேசமாநிலம் பந்தாவ்கரில் உள்ள புலிகள் சரணாலயத்தில் புதிதாக போடப்பட்ட புலிக்குட்டிகளின் வாழ்க்கை. தாய் புலி அவைகளுக்கு கற்றுக் கொடுக்கும் நுணுக்கங்களை தெளிவாகப் படம் பிடித்துள்ளனர்.

    விளையாட்டாய் வேட்டையாடும் புலி

    விளையாட்டாய் வேட்டையாடும் புலி

    புலிகளின் ரகசிய நடத்தை, வேட்டையாடும் திறன், அவற்றின் சாகசங்கள் பற்றிய கதைகள் ஆகியவற்றை அனிமல் பிளானட் சேனல் குழுவினர் படம் பிடித்திருக்கிறார்கள்.

    அஜய் தேவ்கான், பிபாஷா பாசு

    அஜய் தேவ்கான், பிபாஷா பாசு

    புலிகள் பற்றி தங்களுக்கு இருக்கும் ஆர்வத்தின் காரணமாக இந்தத் தொடருக்காக அனிமல் பிளானட் சேனலுடன் கைகோர்க்கிறார்கள் பிரபல இந்தி நட்சத்திரங்கள் அஜய் தேவ்கன், பிபாஷா பாசு.

    அபினவ் பிந்த்ராவும் புலியின் ரசிகர்

    அபினவ் பிந்த்ராவும் புலியின் ரசிகர்

    ஒலிம்பிக் தங்கப்பதக்க வீரர் அபினவ் பிந்த்ரா புலியின் மீதுள்ள காதலினால் இந்த நிகழ்ச்சிக்கான முன்னோட்ட விளம்பரத்தில் பங்கேற்றுள்ளார். புலிகளைப் பற்றி அபினவ் பிந்த்ராவும் சில சுவரஸ்ய தகவல்களை கூறுகிறார்.

    குட்டிகளை உண்ணும் புலிகள்

    குட்டிகளை உண்ணும் புலிகள்

    அழியும் நிலையில் இருக்கும் புலிகள் இனத்தை காப்பாற்ற முயற்சிக்கும் இந்த நிகழ்ச்சியில் மனிதர்களை உண்ணும் புலிகள், தங்கள் குட்டிகளையே உண்ணும் புலிகள் என பல சுவாரசிய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. புலிகளின் காதலர்கள் இன்று முதல் தினசரி இரவு 9 மணிக்கு அனிமல் பிளானட்டில் பார்த்து ரசியுங்களேன்.

    English summary
    Amazing video footage, a good script and some serious introspection makes Animal Planet's upcoming documentary series on the Royal Bengal tiger a must-watch, not just for animal lovers but for all those who take pride in being Indian
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X