»   »  இனி சீரியலில் நடிக்கமாட்டேன்… பிரியா திடீர் சபதம்

இனி சீரியலில் நடிக்கமாட்டேன்… பிரியா திடீர் சபதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு சீரியலில் நடித்ததே போதும் அதுவே கடைசி இனி சீரியலில் நடிக்கவே மாட்டேன் என்று முடிவு செய்து இளம் நெஞ்சங்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறார் பிரியா.

சீரியல் பார்க்காத இளைஞர்களை கூட விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலை பார்க்க வைத்த பெருமைக்கு உரியவர் பிரியா. திடீரென்று இப்படி அறிவித்தது ஏன் என்று அவரே கூறியுள்ளார் படியுங்கள்.

என்ஜினியரிங் பட்டதாரி

என்ஜினியரிங் பட்டதாரி

மயிலாடுதுறை பூர்வீகமாக இருந்தாலும் சென்னையிலேயே பிரியாவின் குடும்பம் குடியேறிவிட்டதால் இவரும் சென்னைவாசியாகவே மாறிவிட்டார். படித்தது பொறியியல் துறை, ஐ.டி வேலை போரடிக்கவே செய்திவாசிப்பாளர் வேலைக்கு விண்ணப்பித்தாராம்.

செய்திகள் வாசிப்பது பிரியா

செய்திகள் வாசிப்பது பிரியா

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவருக்கு சீரியல் வாய்ப்பு கிடைக்கவே இப்போது கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து வருகிறார்.

விளம்பர வாய்ப்பு

விளம்பர வாய்ப்பு

சீரியல் தந்த அறிமுகம், நகைக்கடை, துணிக்கடை விளம்பரங்களின் தூதுவராகவும் சின்னத்திரையில் எட்டிப்பார்க்கிறார் பிரியா.

நிகழ்ச்சி தொகுப்பாளர்

நிகழ்ச்சி தொகுப்பாளர்

விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரியா, 62 வது பிலிம்ஃபேர் விருது வழங்கும் விழாவையும் தொகுத்து வழங்கினார். சீரியலில் நடிப்பதை விட நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதுதான் தனக்கு பிடித்திருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

மாப்பிள்ளை தேடறாங்க

மாப்பிள்ளை தேடறாங்க

வீட்ல தீவிரமாக மாப்பிள்ளை தேடுறாங்க... சீக்கிரம் கல்யாணம் பண்ணி செட்டில் ஆக வேண்டியதுதான் என்றும் கூறுகிறார் பிரியா. அப்போ பிரியா வீட்டில் கல்யாண மேளச்சத்தம் கேட்கப் போகுதுன்னு சொல்லுங்க.

English summary
TV actress Priya is willing to settle down with marriage and not ready to act anymore
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil