'பருத்தி வீரன்' பிரியாமணி 'ஜட்ஜ்' ஆனார்...டிவி ரியாலிட்டி ஷோவில்...!
பருத்திவீரன் புகழ் பிரியாமணி சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக வலம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சினிமாவில் வாய்ப்புகள் குறைந்துபோனால் நடிகைகள் நாடுவது சின்னத்திரையைத்தான்.
சீரியல் நடிகையாகவோ, அல்லது ரியாலிட்டி ஷோ தொகுப்பாளராகவோ களம் இறங்குவார்கள். அதை விட எளிதான வேலை நடுவராக அமர்ந்து மார்க் போடுவதுதான்.

சின்னத்திரையைத்தான்.
சீரியல் நடிகையாகவோ, அல்லது ரியாலிட்டி ஷோ தொகுப்பாளராகவோ களம் இறங்குவார்கள். அதை விட எளிதான வேலை நடுவராக அமர்ந்து மார்க் போடுவதுதான்.

நடுவரான பிரியாமணியும்
பிரபல மலையாள சேனல் ஒன்றின் நடன ரியாலிட்டி ஷோவின் நடுவராக பிரியாமணி வர உள்ளதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

டான்ஸ் ஷோ
மலையாள சேனலான மனோரமா டிவி சேனலில் டி 4 டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சி ஏப்ரல் முதல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஒரு நடுவராக வரப்போகிறார் பிரியாமணி.

கலா மாஸ்டர்
ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் நடுவராக பிரபல நடன இயக்குநர் கலா பங்கேற்றுள்ளார். அவருடன் இணைந்து பிரியாமணி, போட்டியாளர்களுக்கு மதிப்பெண்களை வழங்குவார்.

ஆதரவு கொடுங்களேன்
இது குறித்து தனது இணையதள பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ள பிரியாமணி, நிகழ்ச்சியைப் பாருங்க... ஆதரவு கொடுங்க என்று கூறியுள்ளார்.

அப்போ சினிமா?
பிரியாமணி கடைசியாக சாருலதா படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார். காதலிக்கிறார், திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றெல்லாம் தகவல் வெளியானது. அதை அவசரம் அவசரமாக மறுத்தார். சினிமா வாய்ப்பு குறைந்து போகவே இப்போது டிவி நிகழ்ச்சியில் நடுவராக வந்து விட்டார்.


Click it and Unblock the Notifications











