Priyamanaval serial: பிரியமானவள் சீரியலை பிரிய மனமில்லையா சன் டிவிக்கு?
சென்னை: சன் டிவியில் காலை 11:30 மணிக்கு விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பில் உருவான பிரியமானவள் சீரியல் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்த சீரியல் இரவு 9 மணிக்கு என்று ஆரம்பித்த நிலையில்,அதன் பிறகு இரவு 10 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு, அந்த நேரத்தோடு அந்த சீரியல் முடிந்தும் போனது.
சீரியல் ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கும்போதே பகல் நேரத்தில் காலை 11:30 மணிக்கு கடந்த ஒரு வருடமாக மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

பிரியமான அம்மா
பிரியமானவள் சீரியலில் அம்மா உமா கேரக்டர் எல்லாரையும் கவர்ந்தது. காரணம் எல்லார் வீட்டிலும் அதே போல அன்பான அம்மா தினம் வளைய வந்துகொண்டுதான் இருப்பார்கள். இப்படி ஒரு பக்கம் நெகிழ்வுடன் இருந்தாலும், கொலை, கொள்ளை, ஆட் கடத்தல், அதிகாரத்தை துஷ் பிரயோகம் செய்வது என்று ஒரே வன்முறையாகிப் போனது பிரியமானவள் சீரியல். நிஜமா பிபி எகிறித்தான் போனது சீரியல் பார்க்கும் பலருக்கும்.

மீண்டும் எதுக்கு
முதன் முதல் ஃபிரஷ் டோஸ் குடுத்தப்பவே பலருக்கும் வன்முறை இருந்தது பிடிக்கலை .மறுபடியும் இந்த சீரியலை மெனக்கட்டு சன் டிவி மறு ஒளிபரப்பு செய்வது ஏன்? விகடன் டெல்விஸ்ட்டாஸ் நிறுவனத்துக்கு அந்த நேரத்தை ஒதுக்குவது என்றாலும், ஒரு வருட காலத்துக்கும் மேலாகியும், இன்னமும் அவர்களால் பது சீரியலை .தயாரிக்க முடியலையா?

இப்படி இல்லை
வழக்கமா சன் டிவி இப்படி இல்லை... நல்ல ஒரு நிகழ்ச்சியையே ரெண்டாவது ஒளிபரப்பு செய்வது என்பது ஆரம்ப காலத்திலிருந்தே இல்லை. இடையில் இப்போது அப்படி பார்க்கலாம் என்றாலும், சீரியலை மறு ஒளிபரப்பு செய்வது என்பது சன் டிவி நடைமுறையில் இல்லை. இந்த சீரியல்,அப்படி என்ன மாபெரும் வெற்றியைத் தொட்டு விட்டது என்று இரு நிறுவனமும் சேர்ந்து மறு ஒளிபிறப்பில் உறுதியாக நிக்கறாங்க.

எங்களுக்கு நாட் ஓகே
உங்களுக்கு வருமானம், டைம் செட்டிங், விளம்பர வருமானம் எல்லாத்திலும் ஓகே என்றால் கூட... எங்கள் மீது ஏன் திணிக்கிறீர்கள்? அந்த அரைமணி நேர ஸ்லாட்டுக்கு எத்தனை பேர் உங்களை நாடி வந்து கொண்டு இருப்பார்கள். அதை என் நீங்கள் கவனத்தில் எடுத்துக்கலை? நிஜமா பிரியமானவள் சீரியலின் மறு ஒளிபரப்பை யாரும் பார்க்கறதில்லைங்க.... விஜய் டிவியில் அந்த நேரத்தில் அரண்மனைக் கிளி சீரியலை பார்க்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











