புருஷன் பேச்சை கொஞ்சமாச்சும் கேளும்மா VJ பிரியங்கா.. கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகியும் இப்படியா?

சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. கடந்த சில ஆண்டுகளாகவே இவர் விஜய் டிவியில் மிகவும் முக்கியமான ஆங்கராக மாறியுள்ளார். விஜய் டிவி மட்டும் இல்லாமல், பல திரைப்படங்களின் புரோமோஷன்கள், பல யூடியூப் சேனல்களுக்காக பிரபலங்களை பேட்டி எடுப்பது, பல நிறுவனங்களின் சினிமா விருது நிகழ்ச்சிகள் என பலவற்றை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தனது கணவருடன் செம்ம ஜாலியாக இருக்கும் வீடியோவைப் பகிர்ந்து தனது முதலாம் ஆண்டு திருமண கொண்டாட்டம் என்று கேப்ஷன் இட்டுள்ளார்.

பிரியங்காவின் இரண்டாவது திருமணம் நடைபெற்று முடிந்த பின்னர் தான் இது தொடர்பான தகவல்கள் அனைவருக்கும் தெரிந்தது. இவர் சீரியல் தயாரிப்பாளர் வசியை திருமணம் செய்து கொண்டார். இது இருவருக்கும் இரண்டாவது திருமணம். அதேபோல் இவர்களின் திருமணம் நடைபெற்ற மண மேடையில் பிரியங்கா தேஷ்பாண்டேவின் அப்பா புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. பிரியங்காவின் அப்பாவான தேஷ்பாண்டே பிரியங்கா சிறுவயதில் இருக்கும் போது மறைந்துவிட்டார். அப்பா மீது இருக்கும் பாசத்தினால் பிரியங்கா தனது தந்தையின் புகைப்படத்தை மண மேடையில் வைத்துள்ளார்.

Priyanka Deshpande Celebrates First Wedding Anniversary with Husband Vasi Fun Dance Video Goes Viral

இவர்களின் திருமணத்தின் போது, தனது கழுத்தில் வசி தாலி கட்டிய பின்னர் மிகவும் எமோஷனலான பிரியங்கா தேஷ்பாண்டே ஆனந்த கண்ணீர் சிந்தினார். குறிப்பாக தனது கணவர் வசியை மிகவும் எமோஷனலாக பார்த்து அழுதார். பிரியங்கா தேஷ்பாண்டே அழுவதை பார்த்ததும், அவரை தேற்றுவதற்கு பிரியங்காவின் நெற்றியில் முத்தம் வைத்தார். இருவரும் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் வீடியோ இவர்கள் திருமணம் தொடர்பான செய்திகளும் தகவல்களும் பரவியபோது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.

முதலாம் ஆண்டு திருமண நாள்: இப்படி இருக்கையில் பிரியங்கா தேஷ்பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முதலாவது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் விதமாக, தனது கணவர் வசி உடன் செம்ம ஜாலியாக இருக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் செம்மையான குத்து பீட்க்கு அட்டகாசமாக ஆடுகிறார். அவரது கணவரோ, ரொம்ப ஆடதம்மா என்று கண்ட்ரோல் செய்வது போலச் செய்கிறார். கடைசியாக இருவரும் செம்ம ரொமாண்டிக்காக கட்டிப்பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Priyanka Deshpande Celebrates First Wedding Anniversary with Husband Vasi Fun Dance Video Goes Viral

வாழ்த்து: இது தொடர்பான வீடியோவைப் பகிர்ந்து, இன்று எங்களுக்கு முதலாவது ஆண்டு திருமண நாள் என்று கேப்ஷனிட்டுள்ளார் பிரியங்கா தேஷ்பாண்டே. இவரது இந்த வீடியோவுக்கு பிரபலங்கள் பலருமே லைக் போட்டு திருமண நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் சில நெட்டிசன்களோ விளையாட்டாக, ஏம்மா பிரியங்கா புருஷன் பேச்சையும் கொஞ்சமாச்சும் கேளும்மா என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X