கால் முடியாத நிலையிலும்.. பிக் பாஸ் ராஜுவுக்காக வந்த பிரியங்கா.. இதுதாங்க நட்பு!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக பங்கேற்று டைட்டிலை வென்ற ராஜு ஜெயமோகன் ஹீரோவாக அறிமுகமாகி உள்ள பன் பட்டர் ஜாம் படத்தின் ப்ரீமியர் காட்சியை காண கால் முடியாத நிலையிலும் வாக்கிங் ஸ்டிக் வைத்துக் கொண்டு பிரியங்கா தேஷ்பாண்டே வந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5ல் ராஜு ஜெயமோகன் மற்றும் பிரியங்கா இடையே மோதல் ஏற்பட்டாலும், கடைசி வரை இருவரும் நட்பையும் விட்டுத் தரவே இல்லை. ராஜு டைட்டிலை வெல்ல ரன்னர் அப் ஆக மாறினார் பிரியங்கா தேஷ்பாண்டே.

விஜய் டிவி தொகுப்பாளினி டிடி நீலகண்டனுக்கு காலில் வலி ஏற்பட்டு அவரால் ரொம்ப நேரம் ஒரே இடத்தில் நிற்க முடியாது. அதே போல சமீப காலமாக பிரியங்காவின் நிலைமை மாறிவிட்டதா என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
2வது திருமணம்: முதல் திருமணம் சரியாக அமையாத நிலையில், கணவரை பிரிந்த விஜே பிரியங்கா 2வதாக சமீபத்தில் டிஜே வசி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்குப் பிறகு பழையபடி நிகழ்ச்சிகளில் பிரியங்கா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரோ கால் முடியாத நிலையில், தொடர்ந்து ஸ்டிக் வைத்து தாங்கி தாங்கி நடந்துக் கொண்டிருக்கிறார்.
ராஜுவுக்காக வந்த பிரியங்கா: பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் ராஜு ஜெயமோகன் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே இருவரும் ஒன்றாக விளையாடிய நிலையில், அவர் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள பன் பட்டர் ஜாம் படத்தை தியேட்டரில் பார்த்த பிரியங்கா ராஜுவையும் பார்த்து கட்டித்தழுவி தனது ஆதரவை தெரிவித்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
இதுதான் நட்பு: விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் பிக் பாஸ் தமிழ் பிரபலங்கள் பலரும் பன் பட்டர் ஜாம் படத்தின் ப்ரீமியர் திரையிடப்பட்ட நிலையில், அந்த படத்தை பார்த்து அவரை பாராட்டி வருகின்றனர். விஜய் டிவியில் இருந்து ஏற்கனவே சந்தானம், சிவகார்த்திகேயன், கவின், ஹரிஷ் கல்யாண் என பல ஹீரோக்கள் வெள்ளித்திரையில் கலக்கி வரும் நிலையில், அடுத்ததாக ராஜு ஜெயமோகனும் ஹீரோவாக கலக்குவார் என வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











