நெட்டிசன் போட்ட ஒரே ஒரு ட்வீட்.. திடீரென கண் கலங்கிய பிக் பாஸ் பிரியங்கா.. இப்படி எமோஷனலாகிட்டாரே!
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான அழகிய பெண்ணே, இசை அன்பிளக்ட் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்கள் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே. சுட்டி டிவி, சன் மியூசிக், சன் டிவி என சன் நெட்வொர்க்கின் பல சேனல்களில் பணியாற்றி வந்த பிரியங்கா சினிமா காரம் காபி எனும் காசிப் ஷோ மூலம் விஜய் டிவியில் அடியெடுத்து வைத்தார்.
அதன் பின்னர் பல ஆண்டுகள் தொகுப்பாளினியாக சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, ஸ்டார்ட் மியூசிக், பிக் பாஸ் சீசன் 5 என அப்படியே விஜய் டிவியின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டார்.

சுமார் 15 ஆண்டுகள் டிவி சேனல்களில் தொகுப்பாளினியாக தோன்றி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வரும் பிரியங்காவின் பணியை பாராட்டி சமீபத்தில் அவரது ரசிகை ஒருவர் பதிவிட்ட போஸ்ட்டை பார்த்து கண்கலங்கி விட்டார் பிரியங்கா தேஷ்பாண்டே.
சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி: பாவனா பாலகிருஷ்ணன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த நிலையில், விஜய் டிவியில் இருந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழுக்கு அவர் ஜம்ப் ஆகிவிட்டார். அதன் பின்னர், சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சிகளை மாகாபா ஆனந்த் உடன் இணைந்து தொகுத்து வழங்கி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் பிரியங்கா. பாடல் நிகழ்ச்சியில் காமெடி பண்ண முடியும் என கொண்டு வந்து பலரையும் சிரிக்க வைத்து தனது ஃபேனாகவே மாற்றி விட்டார் பிரியங்கா.
பிக் பாஸ் ரன்னர் அப்: பிக் பாஸ் சீசன் 3ல் கெஸ்ட்டாக உள்ளே சென்று வந்த பிரியங்கா 5வது சீசனில் போட்டியாளராக உள்ளே நுழைந்தார். விஜய் டிவியில் இருந்து இதற்கு மேல் என்னை துரத்தி அடித்தாலும் பரவாயில்லை. இங்கே நான் நானாக இருக்கப் போகிறேன் என கடைசி வரை அலப்பறையை கிளப்பிய பிரியங்கா கடைசியில் ரன்னர் அப் ஆனார். ராஜு ஜெயமோகன் டைட்டிலை தட்டிச் சென்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்காவுக்கு அதிக ஹேட்டர்களும் உருவாகினார்கள்.
15 ஆண்டுகள்: ஜீ தமிழில் ஆரம்பித்து விஜய் டிவி வரை என சுமார் 15 ஆண்டுகள் டிவி சேனல்களில் தினம்தோறும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார் பிரியங்கா. இது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை என்றும் முதல் நாளில் முதல் ஷோவில் எப்படி இன்முகத்துடன் இருந்து ரசிகர்களை என்டர்டெயின் செய்தாரோ இப்போது வரை அதே பணியை அப்படியே செய்து வருவது தான் பிரியங்காவோட பலமே என அவருடைய 15 ஆண்டுகால ஆங்கரிங் வாழ்க்கையை பாராட்டி ஜெனி எனும் ரசிகை போட்ட ட்வீட்டை பார்த்து கண்கலங்கி போய் விட்டார் பிரியங்கா.

கண்கலங்கிய பிரியங்கா: பிரியங்காவின் தீவிர ரசிகையின் போஸ்ட்டை பார்த்து இதற்கு என்ன சொல்றதுன்னே தெரியல, வார்த்தைகளே வரல, எப்போதும் எனக்கான நீ இருக்கன்னு தெரியும். இதை படிச்சிப் பார்த்த உடனே இன்னும் எக்ஸ்ட்ரா ஹேப்பியுடன் ரசிகர்களை தொடர்ந்து என்டர்டெயின் பண்ணனும்னு தோணுது பண்ணுவேன் என பிரியங்கா நன்றி தெரிவித்துள்ளார். பிரியங்காவுக்கு அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். சூப்பர் சிங்கர் 6ல் ஆரம்பித்து சமீபத்தில் நிறைவடைந்த சூப்பர் சிங்கர் 10வது சீசன் வரை இவர் தொகுத்து வழங்கி உ ள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











