கணவருடன் பிரச்சினை.. விவாகரத்து செய்துவிட்டாரா விஜய்டிவி பிரியங்கா? குட்டையை குழப்பிய பிரபலம்!
சென்னை : விஜய் டிவி பிரியங்கா தேஷ்பாண்டே அவரது கணவரை விவாகரத்து செய்ய உள்ளதாக சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
பிரியங்கா சமீப காலமாக தனது அம்மாவுடன் இருக்கும வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுகிறாரே தவிர கணவருடன் இருக்கும் எந்தவிதமான புகைப்படங்களையும் வெளியிடவில்லை.
அதேபோல, பிரியங்காவும் தனது கணவர் குறித்து இதுவரை எதுவும் பேசாமல் இருப்பதால் பிரிந்துவிட்டது உண்மைதானா என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

பிரியங்கா
விஜய் தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளினி பிரியங்கா. இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1 போன்ற பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். எந்த நிகழ்ச்சி என்றாலும் அந்த நிகழ்ச்சியை கலகலப்பாக காமெடியாக தொகுத்து வழங்குவது பிரியங்கா தேஷ்பாண்டேவின் ஸ்டையில். இதனால் , இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உண்டு.

பிக் பாஸ் சீசன் 5
பிரியங்கா அண்மையில் முடிந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு ரன்னர் அப் ஆனார். பிக்பாஸ் வீட்டில் பிரியங்காவின் நடவடிக்கையால் பல நெகடிவ் விமர்சனங்களையும், அன்பையும் பெற்று 2வது இடத்தை பெற்றார்.

பிரவீன் வரவில்லை?
பிக் பாஸ் வீட்டில் இருந்த போது பிரியங்கா கணவர் பிரவீன் பற்றி ஏன் பேசவில்லை என்றும், ஃபிரீஸ் டாஸ்கில் கூட பிரியங்காவின் அம்மா மற்றும் அவரது தம்பி மட்டுமே வந்தார்கள்.பிரவீன் வரவில்லை? என ஏகப்பட்ட கேள்விகள் உலா வந்தன. ஆனால், பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியில் வந்த பிரியங்காவும் தன் கணவர் குறித்து எதுவும் பேசாமல் மௌனமாகவே இருந்தார்.

பிரியங்காவுக்கு தலைக்கணம்
இந்நிலையில், நடிகர் மற்றும் நடிகை குறித்து யூடியூபில் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் ஒரு சினிமா பத்திரிக்கையாளர், பிரியங்காவும் அவரது கணவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் விரைவில் இருவரும் விவாகரத்து பெற்றுவிடுவார்கள் என்றும் கூறியுள்ளார். இவர்கள் இருவரின் பிரிவுக்கு முக்கிய காரணம் பிரியங்காத்தான் என்றும், அவருக்கு பெயரும் புகழும் அதிகமானதால் தலைக்கணம் அதிகமாகி விட்டதாகவும் அந்த வீடியோவில் அந்த பிரபலம் கூறியுள்ளார்.

மோசமான விமர்சனம்
அண்மைக்காலமாக இந்த சினிமா பத்திரிக்கையாளர் பல நடிகர் நடிகைகள் குறித்து மோசமாக விமர்சித்து குட்டையை குழப்பி வருகிறார். நேற்று, கஸ்தூரி கூட தனது ட்விட்டர் பக்கத்தில் இவரை, கடுமையாக திட்டி ஒரு பதிவை போட்டு இருந்தார். மேலும், இவர் மீது வழக்கு தொடுக்க இருப்பதாகவும் இதற்காக பத்திரிக்கையாளர்கள் மற்றும் நடிகர்களின் ஆதரவை கோரியிருந்தார்.


Click it and Unblock the Notifications











