பிரியங்கா தேஷ்பாண்டே 2வது கணவர் யார் தெரியுமா?.. டிஜேவை திருமணம் செய்த விஜே.. செம காம்போவா இருக்கே!

சென்னை: விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக வலம் வரும் பிரியங்கா தேஷ்பாண்டே நேற்று திடீரென ரகசியமாக தனது 2வது திருமணத்தை நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் சூழ திருமணம் செய்துக் கொண்டார். அவரது திருமண வீடியோ ஒன்று வைரலாக என்னது விஜே பிரியங்காவுக்கு 2வது திருமணம் நடந்துவிட்டதா என ரசிகர்கள் ஷாக் ஆனார்கள்.

மேலும், சிலர் நம்பாமல் அது ஏதாவது விளம்பர படமாக இருக்கப் போகிறது என்றும் பேசத் தொடங்கினர். ஆனால், பிரியங்காவின் குடும்ப உறுப்பினர்கள் இருப்பதை பார்த்து அது நிஜ திருமணம் தான் என்கிற முடிவுக்கும் வந்தனர்.

Priyanka Deshpande done second marriage here are the complete details of her second husband DJ Vasi Sachi

ரசிகர்களை ரொம்ப நேரம் டவுட்டில் வைத்திருக்க வேண்டாம் என நினைத்த பிக் பாஸ் பிரபலமான விஜே பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே திருமண புகைப்படங்களை பதிவிட்டு லைஃப் அப்டேட் என கேப்ஷன் போட்டுள்ளார். அடுத்து பிரியங்கா தேஷ்பாண்டே அஜித் போல சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில் இருப்பவரை திருமணம் செய்துக் கொண்டாரே யாரு அந்த பிரபலம் என தேட ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கான விடையை இங்கே தருகிறோம்.

பிரியங்கா தேஷ்பாண்டேவின் 2வது கணவர் யார்?: வசி என்பவரை பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் செய்துக் கொண்ட தகவல்க் நேற்று இணையத்தில் அனல் பறந்த நிலையில், அவர் தொழிலதிபரா? சீரியல் தயாரிப்பாளரா? என ஏகப்பட்ட யூகங்கள் கிளம்பின. ஆனால், அவர் ஒரு பிரபல டிஜே என்பது தற்போது தெரியவந்துள்ளது. டிஜே வசி சாச்சி என்பவரை தான் விஜய் டிவியின் செல்ல தொகுப்பாளினி பிரியங்கா நேற்று திருமணம் செய்துக் கொண்டார்.

Priyanka Deshpande done second marriage here are the complete details of her second husband DJ Vasi Sachi

யாரு இந்த வசி சாச்சி?: பிரபல டிஜேவாகவும் ஈவென்ட் கம்பெனியான க்ளிக் 187 நிறுவனத்தை நடத்தி வருகிறார். பல டிஸ்கோத்தே பார்ட்டிகளுக்கு டிஜே இசையமைத்து வரும் இவர் பிரபலங்களின் திருமணங்களிலும் டிஜேவாக செயல்பட்டு இண்டஸ்ட்ரியில் பலருக்கும் தெரிந்த முகம் தான். சில மாதங்களுக்கு முன்னதாக திருமண நிகழ்ச்சி ஒன்றில் தான் டிஜே வசியுடன் பிரியங்காவுக்கு நட்பு ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மலர்ந்து தற்போது திருமணம் வரை வந்துள்ளதாக கூறுகின்றனர்.

வாழ்த்தும் பிரபலங்கள்: டிஜே வசியை விஜே பிரியங்கா திருமணம் செய்துக் கொண்ட நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்த டிடி நீலகண்டன், ரியோ ராஜ், கேபிஒய் சரத், பிக் பாஸ் அர்ச்சனா, விஜே அர்ச்சனா, நாஞ்சில் விஜயன், சிவாங்கி, சுனிதா என ஒட்டுமொத்த விஜய் டிவி பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். கூடிய சீக்கிரமே கணவர் வசியுடன் பிரியங்கா பிரத்யேகமாக பேட்டிகளையும் கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கண்கலங்கிய பிரியங்கா: பிரபல விஜேவாக பலரது மனங்களில் இடம்பிடித்துள்ள விஜே பிரியங்கா பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துக் கொண்டு ரன்னர் அப் ஆனார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர் தொகுத்து வழங்கும் ஸ்டைல் பலருக்கும் பிடித்துப்போன ஒன்று. பிரவீன் குமார் என்பவருடன் முதல் திருமணத்தை பிரியங்கா நடத்தி முடித்த நிலையில், இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இந்நிலையில், இரண்டாவதாக தனது கழுத்தில் தாலி ஏறும் போது மணமேடையிலேயே பிரியங்கா கண் கலங்கிய காட்சிகளும், கணவர் வசி இனிமேல் நான் இருக்கேன் பார்த்துக்கிறேன் என முத்தம் கொடுத்த தருணமும் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X