Priyanka: மணமேடையில் பிரியங்காவின் அப்பா புகைப்படம்.. 2வது திருமணத்தில் எமோஷனலான கல்யாண பொண்ணு..

சென்னை: இணையத்துக்குள் நுழைந்தாலே விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவின் இரண்டாவது திருமணம் குறித்த தகவல்கள் தான் செம வேகமாக பரவி வருகிறது. சீரியல் தயாரிப்பாளர் வசி என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமணம் இன்று அதாவது ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இவர்களின் திருமணம் தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் வேகமாக பரவி வருகிறது.

Vijay TV Priyanka Deshpande Getting Her Second Marriage Infront Of Her Dad s Photo With Emotional Connection

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ளது என்றால் அது ஸ்டார்ட் மியூசிக். இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள் தொடங்கி வெள்ளித்திரை பிரபலங்கள் என பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி மட்டும் இல்லாமல் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இப்படியான நிலையில் இன்று மாலை முதல் பிரியங்கா குறித்த புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Vijay TV Priyanka Deshpande Getting Her Second Marriage Infront Of Her Dad s Photo With Emotional Connection

அதாவது அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவின் இரண்டாவது திருமணம் குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் தான். பிரியங்கா தேஷ்பாண்டே தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளது பலருக்கும் இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. அவர் சீரியல் தயாரிப்பாளர் வசி என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Vijay TV Priyanka Deshpande Getting Her Second Marriage Infront Of Her Dad s Photo With Emotional Connection

அப்பா புகைப்படம்: பரவி வரும் இவர்களின் திருமண வீடியோவில் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவின் அப்பா புகைப்படம் மணமேடையில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. பிரியங்காவின் அப்பாவான தேஷ்பாண்டே பிரியங்கா சிறு வயதில் இருக்கும் போது மறைந்துவிட்டார் என கூறப்படுகிறது. இதனால் இவரது திருமணத்தில் பிரியங்காவின் அப்பாவான தேஷ்பாண்டேவின் புகைப்படம் மணமேடையில் வைக்கப்பட்டுள்ளது.

Vijay TV Priyanka Deshpande Getting Her Second Marriage Infront Of Her Dad s Photo With Emotional Connection

எமோஷனல்: தனது கழுத்தில் வசி தாலி கட்டிய பின்னர் மிகவும் எமோஷனலான பிரியங்கா தேஷ்பாண்டே ஆனந்த கண்ணீர் சிந்தினார். குறிப்பாக தனது கணவர் வசியை மிகவும் எமோஷனலாக பார்த்து அழுதார். பிரியங்கா தேஷ்பாண்டே அழுவதை பார்த்ததும், அவரை தேற்றுவதற்கு பிரியங்காவின் நெற்றியில் முத்தம் வைத்தார். இருவரும் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் லைக்குகளையும் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

Vijay TV Priyanka Deshpande Getting Her Second Marriage Infront Of Her Dad s Photo With Emotional Connection

வருத்தம்: பிரியங்காவின் முதல் திருமண வாழ்க்கை எதிர்பார்த்ததைப் போல் சிறப்பாக அமையவில்லை. இதனால் பிரியங்காவின் அம்மாவும் சகோதரரும் மிகவும் வருத்தத்துடன் இருந்து வந்தார்கள். இப்படியான நிலையில் பிரியங்கா சீரியல் தயாரிப்பாளர் வசியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டது அவர்களது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அவரது தயார் மிகவும் மன மகிழ்ச்சியில் உள்ளார். இவர்களின் திருமண புகைப்படங்களில் மிகவும் உற்சாகமாக காணப்படுகிறார்.

அம்மா: சில ஆண்டுகளுகளுக்கு முன்னர், பிரியங்காவுக்கு பாராட்டு விழா நடந்தது, அதில் கலந்து கொண்டு பேசிய பிரியங்காவின் தாயார், பிரியங்காவின் முதல் திருமணம் குறித்து வருத்தத்துடன் பேசினார். மீண்டும் அப்படியொரு தவறான முடிவு எடுக்காமல், எனது மகள் நல்ல முடிவை எடுப்பார் என நினைக்கிறேன் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது பிரியங்கா கலங்கிய கண்களுடன் சரி எனக் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X