பிக்பாஸுக்காக குவாரண்டைனில் இருக்கும் பிரபல தொகுப்பாளினி? தீயாய் பரவும் தகவல்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரபல தொகுப்பாளினி குவாரண்டைனில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்களை கடந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரையின் முக்கிய நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் தொடங்கும் என கூறப்படுகிறது. இதற்கான பணிகளில் நிகழ்ச்சிக் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கல்யாண வீட்டு கலாட்டா
பிக்பாஸ் 5வது சீசனையும் நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்க உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக இதுவரை 3 புரமோக்கள் வெளியாகியுள்ளது. இதன் முதல் புரமோ கல்யாண வீட்டில் நடக்கும் கலாட்டாக்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.

பிக்பாஸ் வீட்டு அளப்பறைகள்
பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த புரமோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது புரமோவாக கமல் ஹாசன் சமையல் செய்துக்கொண்டே இதுவரை பிக்பாஸ் வீட்டில் நடந்த அளப்பறைகள் குறித்து பேசினார். இந்த புரமோவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கிசுகிசு பேசுவது கஷ்டம்
இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரமோ வெளியானது. இதில் பெட்டில் படுத்துக் கொண்டு பேசிய நடிகர் கமல்ஹாசன் இந்த வீட்டில் கிசுகிசு பேசுவது ரொம்ப கஷ்டம் போல என்றார். இதுமாதிரியாக மூன்று புரமோவுமே மூன்று ரகமாக இருந்தது.

குவாரண்டைனில் பிரியங்கா?
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ்பாண்டே குவாரண்டைனில் இருப்பதாக கூறப்படுகிறது.

பிரியங்கா ரசிகர்கள் மகிழ்ச்சி
ஏற்கனவே பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்றும் பங்கேற்கவில்லை என்றும் தகவல் பரவியது. இந்நிலையில் அவர் குவாரண்டைனில் இருப்பதாக தகவல் பரவி வருவது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜிபி முத்து பங்கேற்பு
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க 15 நாட்களுக்கும் குறைவாக உள்ள நிலையில் பங்கேற்கும் போட்டியாளர்கள் இறுதி செய்யப்பட்டு குவாரண்டைனில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே டிக்டாக் பிரபலமான ஜிபி முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என தகவல் வெளியானது.

குக் வித் கோமாளி சுனிதா
அதோடு நடிகை ஷகீலாவின் வளர்ப்பு மகளும் திருநங்கையுமா மிலா பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி பட்டியலில் இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதேபோல் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் சுனிதா, நடிகை சூசன் ஆகியோரும் இறுதி செய்யப்பட்டு விட்டதாக தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











