சட்டவட்டமா உட்கார்ந்து பிரியங்கா கலந்துக்கட்டி அடிக்கறாங்க.. இட்லியை !

சென்னை: விஜய் டிவியின் தி வால் ரியாலிட்டி ஷோ நல்ல பொழுது போக்கு நிகழ்ச்சியாகத்தான் இருக்கிறது. நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்கள் ஒரு புறம் இருக்க... நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பிரியங்கா, மாகபா இருவரும் முக்கிய ககாரணம் என்று சொல்லலாம்.

அதுவும் பிரியங்கா ரொம்ப யதார்த்தமா இருக்கார். உடன் இருப்பவர்களை சிரிக்க வைத்தும் விடுகிறார். மாகாபவும் காமெடியாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதில் பெயர் போனவர்.

இவர்கள் இருவர் காம்பினேஷனில் தி வால் நிகழ்ச்சி அனைவைரையும் கவர்ந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் இது போன்ற காமெடிகள் இருப்பதால்தான் பலரும் நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கிறார்கள்.

ஜோடிப் பொருத்தம்

ஜோடிப் பொருத்தம்

நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஜோடியில் கணவர் ரொம்ப உயரமாக இருந்தார். மனைவி அவருடன் ஒப்பிடுகையில் ரொம்பவே உயரம் கம்மியாக இருந்தார். இவரிடம் உங்களுக்கு எது கவர்ந்தது என்று மாகபா கேட்க, முதலில்நான் இவரை வேணவே வேணாம்னுதான் சொன்னேன் என்று சொன்னார் மனைவி. ஓ...நோ என்று பிரியங்கா உடனே சொல்லி சிரிக்க வைத்தார்.

அவர் ஹைட் பாருங்க

அவர் ஹைட் பாருங்க

அவர் ஹைட்டைப் பாருங்க.. எங்காவது வெளியில் போனால் கூட எவ்ளோ கஷ்டமா இருக்கும் என்று சொன்னார். ஆனால், அவர் கணவர் அவரை அணைத்து ஐ லவ் யூடா செல்லம் என்று சொன்னார். எனக்கு இட்லி சாப்பிட ரொம்ப பிடிக்கும் என்று அவர் சொல்ல, எனக்கும்தான் என்று சொன்ன பிரியங்கா, கடைசியில் அந்த தேங்காய் சட்னியில் கடுகு தாளிச்சு கொட்டி இருப்பாங்க பாருங்க அது பிடிக்குமா பிரதர்னு கேட்டார்.

சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயம்

அதில் இன்னும் சின்ன வெங்காயம் தாளிச்சு போட்டு இருந்தா ரொம்ப பிடிக்கும் என்று சொன்னார் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர். இதில் உணர்ச்சி வசப்பட்ட பிரியங்கா அடடா எனக்கும்தான்.. ஐ லவ் யூ என்று சொல்லி பின்னர் மாகாபா பார்க்க அவ் என்று வாயைப் பொத்திக்கொண்டார் பிரியங்கா.

நிகழ்ச்சியின் முடிவில்

நிகழ்ச்சியின் முடிவில்

நிகழ்ச்சியின் முடிவில் பார்த்தால் அந்த பிரதருடன் செட்டில் உட்கார்ந்து பிரியங்கா இட்லியை கலந்துக்கட்டி உள்ளே அனுப்பிக்கொண்டு இருக்கார். சாப்பாட்டில் இட்லி சாப்பிட ரொம்ப பிடிக்கும் என்று சொன்ன அந்த பிரதருக்கு உடனடியாக விஜய் டிவி செட்டில் இட்லி கிடைத்து விட்டது போலும். எல்லார் நாவையும் ஊற வைத்துவிட்டது இந்த வால் நிகழ்ச்சி. முழு நிகழ்ச்சியையும் பார்க்க, வரும் ஞாயிறு இரவு விஜய் டிவி பாருங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X