ஜெயஸ்ரீ விவகாரம் போலவே.. மற்றொரு பிரபல சீரியல் நடிகர் வீட்டிலும் பிரச்சினை.. காரணம் அந்த இளம்நடிகை!

நடிகை ஒருவரால் நடிகர் அஸீம் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

சென்னை: ஈஸ்வர் - ஜெயஸ்ரீ விவகாரத்தை போல் மற்றொரு நடிகர் வீட்டிலும் ஒரு நடிகையால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், தெய்வம் தந்த வீடு உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் அஸீம். இவருக்கு ஸோயா எனும் பெண்ணுடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடைபெற்ற திருமணம்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே இவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக ஒரு இணைய தளம் செய்தி வெயிட்டுள்ளது. அதற்கு காரணம் ஒரு நடிகை என அதில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக அஸீம் - ஸோயா இருவரும் விவாகரத்து கோரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்களாம்.

நடிகையுடன் காதல்

நடிகையுடன் காதல்

தன்னுடன் சில சீரியல்களில் நடித்த இளம் வயது நாயகியை அஸீம் காதலிக்கிறாராம். அந்த நடிகையும் அஸீமை காதலிப்பதால் தான் பிரச்சினையாம். இருவரும் அடம்பிடித்து ஒரு சீரியலில் ஜோடி சேர, பிரச்சினை முத்திவிட்டதாம்.

மாற்றப்பட்ட நடிகை

மாற்றப்பட்ட நடிகை

கடுங்கோபத்துக்கு ஆளான அஸீமின் மனைவி தரப்பு படப்பிடிப்பு தளத்திற்கே போய் சண்டை போட்டிருக்கிறது. இதையடுத்து, அந்த நடிகையை மட்டும் பாதியிலேயே மாற்றிவிட்டனர் சீரியல் நிறுவனத்தினர். இதனால் தற்போது பிரச்சினை பல மடங்கு அதிகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.

நடிகரே காரணம்

நடிகரே காரணம்

தற்போது அஸீமும், அவரது மனைவியும் பிரிந்து வாழ்கின்றனர். தற்காலிகமான இந்த பிரிவு, விரைவில் நிரந்தரமாகிவிடும் என்கிறது சின்னத்திரை வட்டாரங்கள். இந்தப் பிரச்சினையில் தவறு முழுக்க முழுக்க அஸீம் மீது தான் என்கிறார்கள். ஆனால் நிலைமை இப்போது கை மீறிச் சென்று விட்டதாகக் கூறுகிறார்கள்.

மகாலட்சுமி விவகாரம்

மகாலட்சுமி விவகாரம்

சமீபத்தில் தான் இதே போல் சீரியலில் ஒன்றாக நடித்த போது, நடிகர் ஈஸ்வருக்கும், மகாலட்சுமிக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதாக ஈஸ்வரின் மனைவியும் நடிகையுமான ஜெயஸ்ரீ புகார் அளித்தார். இந்த விவகாரமே இன்னும் முடிவடையாத நிலையில் மற்றொரு நடிகரின் திருமண வாழ்க்கையிலும் நடிகையால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோசமான சின்னத்திரை

மோசமான சின்னத்திரை

முன்பெல்லாம் சினிமாவில் சேர்ந்து நடித்தபோது தான் இது போன்ற பிரச்சினைகளை நடிகர், நடிகைகள் சந்தித்தனர். ஆனால் இப்போதோ சீரியல்களுக்கும் இந்த பிரச்சினை வந்துவிட்டது. அதற்கு மற்றொரு முக்கியக் காரணம், சீரியல்களிலும் கெமிஸ்ட்ரி வேண்டும் என ஜோடிகளை நெருக்கமாக நடிக்க வைப்பது தான்.

டிஆர்பிக்காகவே எல்லாம்

டிஆர்பிக்காகவே எல்லாம்

அதோடு இவர்கள் தான் சிறந்த ஜோடி என்ற பிம்பத்தையும் தங்களது டிஆர்பிக்காக செயற்கையாக உருவாக்கி விடுகிறார்கள். இதுவே நாளடைவில் அவர்களது சொந்த வாழ்க்கையில் பிரச்சினை வரக் காரணமாகி விடுகிறது. இந்த விபரீதத்தை உணர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் செயல்பட்டால் நல்லது.

More from Filmibeat

Read more about: illegal affair
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X