தங்கச்சி செய்த வேலையால அக்கா வாழ்க்கைக்கு எவ்ளோ பிரச்சனை....?

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் அக்கா ஜனனி சந்தோஷை கல்யாணம் செய்த கையோட டைவர்ஸுன்னு சந்தோஷ் சொல்ல கதி கலங்கி நிக்கறா.

சந்தோஷின் தம்பி நவீனை அனாமிகான்ற பேரில், முகத்தை காமிக்காமல் ஜனனியின் தங்கை அனிதா போன் செய்ததில் நவீன் அவள் யாருன்னே திரியாமல் அவள் மேல் காதலில் விழுந்துடறான்.

கடைசியில அனாமிகாவா போன் செய்தது அண்ணியின் தங்கச்சி அனிதாதான்னு தெரிஞ்சுக்கிட்ட நவீன் அனிதான்னாலும் நான் அவளை காதலிக்கிறேன் அண்ணின்னு சொல்ல...அது முடியாது என்று சொல்கிறாள் ஜனனி.

எதனால முடியாது அண்ணி?

எதனால முடியாது அண்ணி?

எதனால முடியாதுன்னு சொல்றீங்க அண்ணி... நான் அனாமிகா குரலைத்தான் முதலில் லவ் பண்ணினேன்... அதனால் இப்பவும் எனக்கு அனாமிகாவைப் பிடிக்கும் அண்ணி. அவளுக்கும் என்னை பிடிக்கும்தானே... அப்புறம் என்ன பிரச்சனைன்னு நவீன் அண்ணியிடம் கேட்கறான்.

அனிதா அத்தை பையனுக்கு

அனிதா அத்தை பையனுக்கு

அனிதாவை எங்க அத்தை பையனுக்கு கல்யாணம் செய்து வைக்கறதா அப்பா வாக்கு கொடுத்து இருக்கார் நவீன்னு ஜனனி சொல்றா... இதுக்கு அனிதா சம்மதிச்சுட்டாளான்னு நவீன் கேட்க, ஆமாம்னு சொல்றா ஜனனி. அப்போ உங்க குடும்பத்துல அனிதா என்னை ஏமாத்திட்டா... அதுல உங்களுக்கும் பங்கு இருக்கு இல்லேன்னு கோவமா பேசறான் நவீன்.

பிடிக்கலை அண்ணியை

பிடிக்கலை அண்ணியை

இதனால் அண்ணியை பிடிக்காம போயிருது நவீனுக்கு. அனிதா தன்னை ஏமாத்திட்டதா குடிச்சுட்டு அண்ணணிடம் சொல்ல, அவனுக்கும் ஜனனி மேல கோபம் வருது. தம்பியை ஜனனி அவ தங்கச்சி ரெண்டு பேரும் ஏமாத்திட்டதா சந்தோஷும் ஜனனியை நினைக்கறான்.

ஜனனி காதலி வர்றா

ஜனனி காதலி வர்றா

ஜனனி அடுத்த வாரம் என் காதலி சக்தி வர்றா...அதனால நீங்க கொஞ்சம்னு சந்தோஷ் ஜனனியிடம் சொல்றான். சரிங்க... எனக்காக ஒரு சின்ன உதவி செய்யுங்க. எனக்கு கூடிய சீக்கிரம் டைவர்ஸ் வாங்கி குடுத்து ஆஸ்ரமத்துக்கு அனுப்பி வைங்க. இந்த வீடு என் வீடுன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்... ஆனா,ஒவ்வொரு நாளும் ஒரு யுகம் மாதிரி போகுதுன்னு சொல்லிட்டு பாத்ரூமுக்கு போயி,கதறி அழறா.

சந்தோஷ் டைவர்ஸ் பண்ண

சந்தோஷ் டைவர்ஸ் பண்ண

ஏற்கனவே சந்தோஷ் டைவர்ஸ் பண்ணனும்னு அலையறான்..இதுல தங்கச்சி அனிதா வேற அக்கா வாழ்க்கையைக் கெடுக்கற மாதிரி இந்த வேலையை செய்து வச்சுட்டா. நவீன் ஜனனியை வார்த்தையால காயப்படுத்திகிட்டு இருக்கான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X