இவருக்கு பதில் இவர்... விஜய் டிவி டாப் சீரியல்களில் மாற்றப்படும் முக்கிய கேரக்டர்கள்

சென்னை : தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் டிஆர்பி மற்றும் அதிக ரசிகர்களை கவர்ந்த சீரியல்கள் விஜய் டிவி சீரியல்களாக உள்ளன. இவற்றில் பல சீரியல்களில் நடிப்பவர்கள் அவர்கள் நடிக்கும் கேரக்டரின் பெயர்களிலேயே பிரபலமாகி உள்ளனர்.

அப்படி ரசிகர்களின் மனதை கவர்ந்தது பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற சீரியல்கள். ஏற்கனவே இந்த சீரியல்களில் சில கேரக்டர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

 மாற்றப்பட்ட கேரக்டர்கள்

மாற்றப்பட்ட கேரக்டர்கள்

பாரதி கண்ணம்மா சீரியலில் ஏற்கனவே கண்ணம்மாவின் அப்பா, அகிலன் என ஒரு சில கேரக்டர்களில் நடித்த நடிகர்கள் மாற்றப்பட்டு, அவர்களுக்கு பதில் வேறு ஒருவர் நடித்து வருகிறார்கள். வெண்பா கேரக்டரில் நடிக்கும் ஃபரீனா ஆசாத் நிஜத்தில் கர்ப்பமாக இருப்பதால் அவர் மாற்றப்படலாம் என கூறப்பட்டது. ஆனால் அந்த கேரக்டரில் சிறிது பிரேக்கிற்கு பிறகு தானே மீண்டும் நடிக்க உள்ளதாக ஃபரீனா தெளிவுபடுத்தி விட்டார்.

கண்ணம்மாவே விலகுகிறாரா

கண்ணம்மாவே விலகுகிறாரா

இந்நிலையில் லேட்டஸ்டாக லீட் ரோலான கண்ணம்மா கேரக்டரில் நடிக்கும் ரோஷினி ஹரிபிரியன், இந்த சீரியலில் இருந்து விலக போவதாக சமீபத்தில் கூறப்பட்டது. அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலக போவதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே ரோஷினி நடிக்கும் எபிசோட்கள் ஒளிபரப்பாகும் என்றும், அதற்கு பிறகு புதிய நடிகை மாற்றப்படுவார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை உறுதியான தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

 முல்லை கேரக்டர் மீண்டும் மாற்றம்

முல்லை கேரக்டர் மீண்டும் மாற்றம்

இதே போல் மற்றொரு முக்கிய சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்த விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டதால் அவருக்கு பதில் காவியா அறிவுமணி மாற்றப்பட்டார். இதே போல் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்த தீபிகாவிற்கு பதிலாக சாய் காயத்ரி மாற்றப்பட்டார். ஆரம்பத்தில் காவியாவை முல்லை கேரக்டரில் ஏற்க தயக்கம் காட்டிய ரசிகர்கள், பிறகு அவரது நடிப்பை ரசிக்க துவங்கி விட்டனர். இந்நிலையில் முல்லை கேரக்டர் மீண்டும் மாற்றப்பட உள்ளதாம்.

புதிய முல்லை இவரா

புதிய முல்லை இவரா

பிக்பாஸ் கவின் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ள ஊர்க்குருவி படத்தில் லீட் ரோலில் நடிக்க காவியா அறிவுமணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாம். அதனால் விரைவில் காவியா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலக போகிறாராம். அவருக்கு பதில் தர்ஷா குப்தா, முல்லை கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இவர் யாருக்கு பதில்

இவர் யாருக்கு பதில்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மற்றொரு புதிய மாற்றமாக பிக்பாஸ் ரியோராஜ் நடிக்க போகிறாராம். இதை ஃபோட்டோவுடன் சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் மூர்த்தி கேரக்டரில் நடிக்கும் ஸ்டாலின். ஆனால் ரியோ, கெஸ்ட் கேரக்டரில் நடிக்க போகிறாரா அல்லது வேறு ஏதாவது கேரக்டரி மாற்றம் செய்யப்பட உள்ளதா என தெரியவில்லை.

மாற்றப்படும் ஹீரோ

மாற்றப்படும் ஹீரோ

விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் மற்றொரு சீரியலான காற்றுக்கென்ன வேலி சீரியலில் ஹீரோவாக நடிக்கும் தர்ஷனுக்கும் சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளதாம். இதனால் அவர் அந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தர்ஷன் நடிக்கும் ஹீரோ சூர்யாவின் கேரக்டரில் இனி நடிகர் சுவாமிநாதன் தான் நடிக்க உள்ளாராம். இனி வரும் வார எபிசோட்களில் தர்ஷனுக்கு பதில் சுவாமிநாதன் நடிக்க போகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X