ஜீ தமிழ் டிவியில் ‘புகுந்த வீடு’: புதிய திருப்பங்கள்

By Mayura Akilan

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பான 'புகுந்த வீடு' தொடர் தற்போது இரவு 8 மணிக்கு புதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

ராதாவின் ஒரே மகளான ஸ்வேதா தன் அப்பா, அம்மா இருவரையும் சேர்த்து வைக்க பல முறை முயற்சித்தும் தோல்வியைத் தழுவுகிறாள்.

இதனால் சோர்வுற்ற ஸ்வேதா, தன் படிப்பின் மீது கவனம் செலுத்தாமல் உடல் நிலையை கெடுத்துக் கொள்கிறாள். இதை உணரும் ராதா, ஸ்வேதாவிற்கு அவளின் அப்பா விசுவை எந்த நேரமும் சந்திக்கலாம் என்று அனுமதிக்கிறாள்.

ராதாவின் உறுதி

ராதாவின் உறுதி

விசுவுடன் ஒருபோதும் சேர்ந்து வாழ்வதில்லை என்ற முடிவில் ராதா நிலையாக இருக்கிறாள். இதனால் முருகன், ராசாத்தி கல்யாணம் மற்றும் ரகு, வைஜெயந்தி இருவரின் வாழ்க்கை இரண்டும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

நாகராஜூக்கு பரோல்

நாகராஜூக்கு பரோல்

ராதாவும் விசுவும் சேராமல் கல்யாணம் வேண்டாம் என்று முருகன் உறுதியாக இருக்க, அனுஷாவின் அண்ணன் ஜெய் ஜெயிலில் இருக்கும் நாகராஜை உசுப்பேற்றி அவனை ராசாத்தியை வைத்தே பரோலில் வரவைக்கின்றான்.

ராசாத்தியின் திருமணம்

ராசாத்தியின் திருமணம்

பரோலில் வரும் நாகராஜ் ராசாத்தியை திருமணம் செய்ய முயற்சிக்கிறான். தன்னால்தான் ராசாத்திற்கு இந்த நிலைமை என்று உணரும் ராதா, அதிரடி முடிவை தெரிவிக்கிறாள்.

ராதாவின் அதிரடி

ராதாவின் அதிரடி

ராதா எடுத்த அதிரடி முடிவு என்ன? முருகன், ராசாத்தி திருமணம் நடைபெற்றதா? ரகு, வைஜெயந்தி இருவரும் தங்கள் வாழ்க்கையை தொடங்கினார்களா? பரபரப்பான திருப்பங்களுடன் தொடர்கிறது, ‘புகுந்த வீடு.'

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X