பூர்ணா நிஜமாவே திருந்திட்டாளா... இல்லை நடிக்கறாளா?
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் அழகம்மை சின்ன மருமகள் பூர்ணா,அம்மா சகுந்தலா தேவி வீட்டில் இருந்தவள், இப்போது மனம் திருந்தியவள் போல, திரும்பவும் அழகம்மை வீட்டுக்கு பெட்டியுடன் வந்திருக்கிறாள்.
இவளோட தம்பி மதன் காவ்யாவை கல்யாணம் செய்துகிட்டு, அம்மா சகுந்தலா தேவி ஏத்துக்காம போனதால,காவ்யா வீட்டில் மதனும் தங்கி இருக்கான்.
மதனை மனசு மாத்தி கூப்பிட்டு போக பூர்ணா வந்திருக்காளா...இல்லை சுதாவை எப்படியாவது ஜெயிச்சே தீரணும்னு நடிக்க வந்திருக்களான்னு சந்தேகம்தான் வருதே தவிர,பூர்ணாவை நம்ப முடியலை..

பூர்ணா பார்ட்டியில்
பூர்ணா பார்ட்னர்ஸுக்கு டின்னர் ஏற்பாடு செய்யறா.வழக்கம் போல கணவன் மகேஷ் அங்கு சர்வரா வேலை பார்க்கிறான்.ஒருத்தன் பூர்ணாவிடம் முறை தவறி நடந்துக்க, அவனை அடிவிட்டு தட்டிக் கேட்கிறான் மகேஷ். அப்போது புருஷனுடன் பெண்கள் வாழ்ந்தால்தான் அழகுன்னு அறிவுரையும் சொல்றான்.,

நன்றி இரவில்
இரவில் கணவன் மகேஷுக்கு போன் செய்து நன்றி சொன்ன பூர்ணா, காலையில் பெட்டியுடன் மகேஷ் வீட்டுக்கு அதாவது அழகம்மை வீட்டுக்கு வர்றா. என்னை மன்னிச்சுருங்க அத்தை...மாமா.நான் எவ்வளவோ கெடுதல் செய்திருக்கேன்... அவமானப்படுத்தி இருக்கேன்...எடுத்தெறிஞ்சு பேசி இருக்கேன்.

வாரிசு உங்களது
என் வயித்துல வளர்ற உங்களோட வாரிசை நல்லபடியா பெத்து உங்க கையில குடுத்துட்டு, நல்ல மருமகளா வாழ வந்திருக்கேன்னு சொல்றா... அழகம்மை பூரிச்சு போயி உள்ளே அழைச்சுட்டு போறாங்க.

பூர்ணா மகேஷ்
பூர்ணா வீட்டுக்கு வந்ததில் மகேஷ் குஷியாகிடறான். மதன் ,காவ்யா ,ஐஸ்வர்யா, சுதா இவங்க மட்டு ம் பூர்ணாவை சந்தேகமா பார்க்கறாங்க. பார்க்கலாமே போகப்போக என்ன நடக்குதுன்னு...


Click it and Unblock the Notifications











