புதுயுகம் டிவியில் மிரட்டும் ‘அனாமிகா’

By Mayura Akilan

புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 .00மணிக்கு திகில் தொடர் , 'அனாமிகா' ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது.

'அனாமிகா' மெகா தொடரில் அமானுஷ்யம், திகில், மர்மம் மற்றும் நெஞ்சைத் தொடும் காதல் கதையும் இடம்பெறுகிறது.

ஜீவா மீது ராணி காதலுடன் இருக்கிறாள். அதற்கு சாட்சியாக ஜீவாவுக்கு ஒரு பிரேஸ்லெட் பரிசளிக்கிறாள். சந்தர்ப்பம் காரணமாக ஜீவாவின் வீட்டில் ராணி தங்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

அமானுஷ்ய நிகழ்வுகள்

அமானுஷ்ய நிகழ்வுகள்

அந்த வீட்டுக்கு ராணி வரும் நேரத்தில் இருந்தே வீட்டில் விரும்பத்தகாத அமானுஷ்ய நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. இரவு நேரத்தில் ஜீவாவின் கார் யாருமற்ற ஒரு அனாதரவான இடத்தில் நின்றுபோகிறது.

கேட்கும் அழுகுரல்

கேட்கும் அழுகுரல்

தூரத்தில் யாரோ அழும் சத்தம் கேட்கிறது. அந்த அழுகுரலைத் தேடிப் போகும் இடத்தில் தன்னுடைய பிரேஸ்லெட்டை தவற விடுகிறான் ஜீவா.

ராணியின் கோபம்

ராணியின் கோபம்

தான் பரிசளித்த பிரேஸ்லெட்டை தவறவிட்ட ஜீவா மீது ராணி கோபமாகிறாள். அதனால் அதை எப்படியும் கண்டுபிடிக்க வேண்டும் என்று ஜீவா கார் தொடங்கி காடு வரையிலும் தேடிப் பார்க்கிறான். ஆனாலும் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது, பிரேஸ்லெட் கிடைக்கவில்லை.

காருக்குள் பிரேஸ்லெட்

காருக்குள் பிரேஸ்லெட்

அன்று இரவு தற்செயலாக பங்களாவின் கேட் திறந்துகிடக்கிறது. கேட் எப்படி திறந்தது என்று புரியாமல் வாட்ச்மேன் விழிக்கிறான். அன்று இரவு காரில் இருந்து தனது பொருளை எடுக்கமுயலும் ஜீவா, காருக்குள் பிரேஸ்லெட் இருப்பதைப் பார்த்து அதிர்கிறான்.

கண்காணிக்கும் உருவம்

கண்காணிக்கும் உருவம்

இத்தனை நேரம் தேடியும் கிடைக்காத பிரேஸ்லெட் இப்போது எப்படி வந்தது என்று விழிக்கிறான். அவனது செயல்களை எல்லாம் ஒரு அமானுஷ்ய பெண் உருவம் கவனித்துக்கொண்டே இருக்கிறது.

அந்தப் பெண் யார்?

அந்தப் பெண் யார்?

யார் அந்த அமானுஷ்ய பெண், அவளுக்கும் ஜீவாவுக்கும் என்ன உறவு, வீட்டில் தொடர்ந்து நடக்கும் விபரீதங்களால் ஒவ்வொருவரும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நோக்கி தொடர் திகிலுடன் நகர்கிறது.

இரவில் திகில் தொடர்

இரவில் திகில் தொடர்

அமானுஷ்யம் நிறைந்திருக்கும் காதல் கதையான, ‘அனாமிகா' மெகா தொடர் புதுயுகம் தொலைக்காட்சியில் தினமும் இரவு 10.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X