twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரிந்த உறவுகளை இணைத்து வைத்த புதுயுகத்தின் உறவைத் தேடி

    By Mayura Akilan
    |

    புதுயுகம் தொலைக்காட்சியின் உறவைத் தேடி நிகழ்ச்சியில் 28 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்ற தந்தை மற்றும் மூன்று சகோதரிகளை தேடி வந்த பார்வையற்ற பெண்ணிற்கு அவரது தந்தையை தேடி கண்டுபிடித்து ஒன்று சேர்த்து வைத்துள்ளனர்.

    காலச் சூழலில் சிதைந்து போய், மீண்டும் சந்தித்துக் கொள்ள வாய்ப்பே இல்லாத உறவுகளை தேடிக் கண்டுபிடித்து மீண்டும் அவர்களை ஒன்று சேர்ப்பதை நோக்கமாக கொண்டு துவங்கப்பட்டுள்ள புது முயற்சியே 'உறவைத் தேடி' நிகழ்ச்சி. ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை இரவு 9.00 மணி முதல் 10.00 மணிவரை இந்த உறவைத் தேடி நிகழ்ச்சி புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிகழ்ச்சியில், - சிறு வயதில் காணாமல் போனவர்கள், - ஏதோ ஒரு வைராக்கியத்தினால் தனது குடும்பத்தினருடன் சேராமல் பல வருடங்களாக பிரிந்து தனியே வாழ்பவர்கள், - பல காரணங்களால் ஊரையும், உறவையும் விட்டு பல வருடங்களாக ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் மற்றும் ஒதுங்கி நிற்பவர்கள், - காதல் திருமணத்தால் பெற்றோரை பல ஆண்டுகளாக பிரிந்து வாழும் தம்பதிகள், - நீண்ட காலங்களாக பிரிந்து, ஒருவரை ஒருவர் முகம் பார்க்க விரும்பாத, பார்க்க வாய்ப்பில்லாத குடும்பங்கள், - உறவினர்கள் யார் என தெரியாமல் தேடித் திரிபவர்கள், - பல வருடங்களாக வெளி நாடுகளில் சொந்தங்களை பிரிந்து வாடுபவர்கள்...

    உறவுகளை இணைக்கும் பாலம்

    உறவுகளை இணைக்கும் பாலம்

    இவை மாதிரியான பிரிவுகளில் இருக்கும் இரு தரப்பிரையும் தேடிக் கண்டுபிடித்து ஒன்றிணைக்கும் சங்கமமே நமது உறவைத் தேடி நிகழ்ச்சியின் மையக் கருவாக கொண்டு துவங்கப்பட்டுள்ளது. 2016 செப்டம்பர் மாதம் 8 ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த உறவைத் தேடி நிகழ்ச்சிக்கு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

    தேடும் உறவுகள்

    தேடும் உறவுகள்

    இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்ட நாள் முதல், தமிழகத்தின் பல இடங்களில் இருந்தும் நமது உறவைத் தேடி குழுவினருக்கு தொலைபேசியில் அழைப்பதோடு, தங்களது குடும்பங்களில் தொலைந்து போன உறவுகளைப் பற்றி கூறிய வண்ணமும் அவர்களை தேடிக் கண்டுபிடித்து தரும்படியும் கூறுகிறார்களாம்.

    அது மட்டுமின்றி, யூடியூப்பில் இந்த நிகழ்ச்சியைக் காணும் வெளி நாட்டு வாழ் தமிழர்கள், கண்ணீர் கலந்த குமுறல் வார்த்தைகளுடன் தங்களது உறவினர்களை பிரிந்து வாழும் சோகம் குறித்து அழைபேசியில் தொடர்பு கொண்டு கூறுவதன் மூலம், இந்த நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதை உணர முடிகிறது என்கிறார் நிகழ்ச்சி தயாரிப்பாளர்.

    பார்வையற்ற பெண்ணின் உறவுகள்

    பார்வையற்ற பெண்ணின் உறவுகள்

    இந்த உறவைத் தேடி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. 28 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்ற தந்தை மற்றும் மூன்று சகோதரிகளை தேடி வந்த பார்வையற்ற பெண்ணிற்கு அவரது தந்தையை தேடி கண்டுபிடித்து உறவைத் தேடி அரங்கில் ஒன்று சேர்த்து வைக்கப்பட்டுள்ளது.

    இணைந்த உறவுகள்

    இணைந்த உறவுகள்

    இதே போல், 22 வருடங்களாக காணாமல் போன தம்பியை கண்டுபிடித்து உறவினர்களுடன் சேர்த்து வைத்த தருணம், அந்தமான் சென்ற நண்பன் சுனாமியில் இறந்ததாக நினைத்து 18 வருடங்கள் கழித்து நமது உறவைத் தேடி அரங்கி இணைந்த நெகிழ்ச்சி தருணங்கள் என பலரையும் இந்த நிகழ்ச்சி மூலம் தேடி கண்டுபிடித்து உறவினர்களுடன் சேர்த்து வைத்து வருகிறது.

    விஜி சந்திரசேகர்

    இது குடும்ப சண்டையை பேசும் நிகழ்ச்சியோ அல்லது சச்சரவுகளை அலசி ஆராயும் நிகழ்ச்சியோ அல்ல. பிரிந்து போன உறவுகளை ஒன்றிணைப்பதையும், குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் புரிய வைக்கும் விதமாகவும் மட்டுமே தயாரித்து, புதுயுகம் தொலைக்காட்சியில் வாரம் தோறும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை ‘தில்லுமுல்லு', ‘ஆரோகணம்' திரைப்படம் புகழ் நடிகை விஜி சந்திரசேகர், தனக்கே உரித்தான பாணியில் அழகாக தொகுத்து வழங்குகிறார். அனைத்து வயதினரும், அனைத்து தரப்பினரும் ஒரு மணி நேரம் விறுவிறுப்பு குறையாமலும், பார்ப்பவர்களை தங்களது குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர வைக்கும் விதத்திலும் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்படுகிறது என்கிறார் இயக்குநர்.

    English summary
    Puthuyugam program Uravai Thedi An attempt to renew broken relationships. Experience Unique, emotional and unforgettable.The program host on Actress Vijichandrasekar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X