»   »  ஒரு பானையை உடைக்க கணவரை இப்படி கஷ்டப்படுத்தலாமா?... ஜீ தமிழின் மிஸ்டர் அன்ட் மிசஸ் கில்லாடிகள்

ஒரு பானையை உடைக்க கணவரை இப்படி கஷ்டப்படுத்தலாமா?... ஜீ தமிழின் மிஸ்டர் அன்ட் மிசஸ் கில்லாடிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உறி அடித்தல், பானை உடைத்தல் என்பது கிராமங்களில் பாரம்பரியமாக விளையாடப்படும் விளையாட்டு. ஜீ தமிழ் டிவியில் ஒரு பானை உடைக்க மனைவியையும், கணவனையும் கம்பியில் கட்டி விளையாடுகிறார்கள். பள்ளத்திற்குள் இருக்கும் மனைவியை மேலே கொண்டு வர கணவன் படும் பாடு இருக்கிறதே... இது நிஜமோ பொய்யோ... ஆனால் ஒல்லியான கணவர்கள் பாடு கொஞ்சம் கஷ்டம்தான்.

ஞாயிறு இரவுகளில் சுவாரஸ்யமாக ஜாலியாக நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்த டிவி சேனல்களில் தற்போது சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. ஜீ தமிழ் டிவியில் சின்னத்திரை நட்சத்திர ஜோடிகள் பங்கேற்கும் மிஸ்டர் அன் மிசஸ் கில்லாடி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. இதில் படவா கோபி தம்பதி, ரக்ஷிதா தம்பதி, காயத்ரி தம்பதி, மைனா என பத்து சின்னத்திரை நட்சத்திர தம்பதியர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியை நேற்று தற்செயலாக பார்க்க நேர்ந்தது.

Rachitha and Dinesh participate Mr & Mrs Killadis on Zee TV

விஜய் டிவி சரவணன் மீனாட்சி புகழ் ரக்ஷிதா தனது கணவர் தினேஷூடன் பங்கேற்றார். பள்ளத்தில் கிடந்த ரக்ஷிதாவை தன் முதுகில் உள்ள கம்பியால் கட்டி தூக்க வேண்டும். மெதுவாக நகர்ந்து, ஊர்ந்து வர ரக்ஷிதா மெதுவாக மேலே வந்து அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் பானையை உடைப்பார்.

பாவம் தினேஷ், கடைசி பாய்ன்டை தொட கஷ்டப்பட்டுத்தான் போனார். பானையை உடைத்து விட்டாலும் கண்ணீர் மல்க கணவர் படும் கஷ்டத்தை பார்த்துக் கொண்டிருந்தார் ரக்ஷிதா.

Rachitha and Dinesh participate Mr & Mrs Killadis on Zee TV

இதேபோல படவா கோபியும் முகமெல்லாம் மனல் அப்பிக்கொள்ள தனது மனைவியை உயர்த்தி பானையை உடைக்க வைத்தார். ஒரு பானையை உடைக்க இத்தனை கஷ்டப்பட வைக்கணுமாப்பா? சின்னத்திரை நட்சத்திரங்கள் நன்றாகவே ரிஸ்க் எடுக்கத்தான் செய்கின்றனர்.

Rachitha and Dinesh participate Mr & Mrs Killadis on Zee TV

ஜீ தமிழ் டிவியில் மிஸ்டர் அன்ட் மிசஸ் கில்லாடி நிகழ்ச்சியை ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக நடத்துகிறார் நிகழ்ச்சி தொகுப்பாளர் தீபக். மொத்தம் 13 வாரங்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் மிக குறைந்த நேரத்தில் போட்டியை முடித்த நட்சத்திரங்களுக்கு மிஸ்டர் அன்ட் மிசஸ் கில்லாடி பட்டம் அளிக்கப்படுகிறது.

English summary
Mr & Mrs Killadis is an Indian Reality Game Television (TV) Show on Zee Tamil. It is New Season of Mr & Mrs Killadis. The show hosted by its former host Deepak.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil