கையிலேயே பிடிக்க முடியலை... அதிசயமே அசந்து போகும் அதிசயம் ரக்ஷிதா.. செம!

சென்னை: பல வருடங்களாகவே குடும்ப குத்துவிளக்காக அனைவரின் மனதிலும் இடம் பிடித்துக் கொண்டிருக்கும் ரக்ஷிதா தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து பல ரசிகர்கள் அசந்துபோய் கமெண்டுகளை கொட்டி வருகின்றனர்.

சரவணன் மீனாட்சி சீரியல் என்று சொன்னாலே அனைவரின் மனதிலும் மீனாட்சியாக வலம் வந்து கொண்டிருந்த ரக்ஷிதா தான் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மகாலட்சுமி ஆக மாறிவிட்டார்.

இதுவரைக்கும் இவரை மீனாட்சி என்று அழைத்த அவருடைய ரசிகர்கள் தற்போது மகாலட்சுமி என்று அழைத்து வருகின்றனர்.

எது கொடுத்தாலும் அல்வா

எது கொடுத்தாலும் அல்வா

எந்த கேரக்டர் கொடுத்தாலும் தனக்கு அல்வா சாப்பிடுவது போல என்று அசால்டாக தூக்கி சாப்பிட்டு விட்டுப் போய்க் கொண்டிருக்கும் இவருக்கு சின்னத்திரையில் கதாநாயகிகளின் மிஞ்சும் அளவிற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இவர் முதல் முதலில் இவரது கணவருடன் ஒரே சீரியலில் அறிமுகமாகி இருந்தாலும் அந்த சீரியலில் நடிக்கும்போது இவர் இந்த அளவிற்கு வருவார் என்று அவர் கூட நினைத்துப் பார்க்க வில்லை .

கணவரே காரணம்

கணவரே காரணம்

ஆனாலும் முதல் சீரியலில் அவருக்கு கிடைத்த வெற்றி அவரது கணவர் தான் . பலபேர் காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தாலும் இவரது காதல் திருமணம் இப்ப வரைக்கும் மிகவும் சந்தோஷமாகவும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாகவும் போய்க்கொண்டிருக்கிறது. இவரும் இவரது கணவரும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு இவர்களுடைய அன்பை அனைவருக்கும் தெரியப்படுத்தி இருக்கின்றனர்.

ரோல் மாடல்

ரோல் மாடல்

பல பேர் காதலித்து திருமணம் செய்து கொண்டு இருந்தாலும் காதலிப்பவர்கள் பல பேருக்கு இவர்கள் ரோல்மாடலாக இருந்து வருகின்றனர் .இவருடைய ஒவ்வொரு வெற்றிக்கும் அவருடைய கணவர் தான் காரணம் என்று பல நிகழ்ச்சிகளில் உருக்கமாக கூறியிருக்கிறார் .அந்த அளவிற்கு இருவரும் பாசத்தோடு வாழ்ந்து வருகின்றனர் .

சினிமா சரிப்படவில்லை

சினிமா சரிப்படவில்லை

இவர் திரைப்படங்களில் காலடி எடுத்து வைத்து கலக்கி இருந்தாலும் அந்த அளவிற்கு இவருக்கு அங்கு திருப்தி ஏற்படவில்லை. அதனால் தான் மீண்டும் சின்னத்திரைக்கு வந்து விட்டார் .சின்னத்திரையில் இவருக்கு எப்போதுமே தனி இடம் இருந்து கொண்டிருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் கதாநாயகியாக இவர் வலம் வந்து கொண்டிருப்பதால் பல குழந்தைகள் பங்குபெறும் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக கலக்கியிருக்கிறார்.

கொஞ்சல்ஸ்

கொஞ்சல்ஸ்

இவர் குழந்தைகளோடு கொஞ்சி விளையாடும் அழகை பார்த்தே பல குழந்தைகள் இவரை ரசிக்க தொடங்கிவிட்டது. அது மட்டுமல்லாமல் சீரியலிலும் இவரது கேரக்டர் இவரது உண்மையான கேரக்டர் போலவே அமைந்து விடுவதால் இவருக்கு எளிதாக நடிப்பதற்கு வந்துவிடுகிறது .ஓவர் ஆக்டிங் செய்யாமல் நேச்சர் ஆகவே இவரது நடிப்பு இருப்பதால் பல பேரை ரசிகர்களாக சம்பாதித்திருக்கிறார்.

நமக்கு இருவர்

நமக்கு இருவர்

தற்போது ஒளிபரப்பப்பட்டு வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மகா கேரக்டரில் வாழ்ந்து வருகிறார் .இந்த கேரக்டர் மூலமாக இவர் பல பேர் மனதில் சிம்மாசனம் இட்டு மீண்டும் அமர்ந்துவிட்டார். கோபத்தை கூட பாசத்தோடு காட்டும் இவரது கேரக்டர் பலபேருக்கு ரொம்பவே பிடித்ததாக இருக்கின்றதாம். அதனால் இவர் சமூக வலைத்தளங்களில் போடும் ஒவ்வொரு போஸ்ட் அவருடைய ரசிகர்கள் தான் கமெண்டுகளை கொட்டி வருகின்றனர் .

செம வீடியோ

செம வீடியோ

அந்த மாதிரி தான் தற்போது அவர் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதைப் பார்த்த அவருடைய ரசிகர்கள் உச்சுக் கொட்டி ரசித்து வருகின்றனர். பலபேர் போட்டோஷூட் நடத்துவதற்கு மாடல் உடைகளில் கவர்ச்சியை காட்டி கலக்கிக் கொண்டிருக்கும் பொழுது இவர் மட்டும் சேலைகளில் படு பவ்வியமாக தனது அழகை மெருகேற்றி காட்டியிருக்கிறார் .

சேலையில் கலக்கல்

சேலையில் கலக்கல்

இவர் லேட்டஸ்டாக வெளியிட்ட போட்டோக்களில் கூட சேலைகளில் கண்ணாடி போட்டுக்கொண்டு கலக்கலான லுக்கு விட்டு மாஸ் காட்டியிருக்கிறார். இந்த போட்டோக்களை பார்த்து அவருடைய ரசிகர்கள் அதிசயமே அசந்து போகும் அதிசயம் நீங்கள் மட்டும்தான் என்று இவருக்காக உருகி உருகி கமெண்டுகளை போட்டு வருகின்றனர். என்ன சொல்லுங்க சேலையில் மகாலட்சுமி தனிக் களைதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X