ராதிகாவுக்கும் உங்களுக்கும் என்ன சண்டை? சட்டென மாறிய முகம்.. பதில் சொல்ல மறுத்த ராதா ரவி!

சென்னை: தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை காலத்தில் இருந்து தற்போது வரை கோலோட்சி வரும் குடும்பம் நடிகர் எம்.ஆர்.ராதாவின் குடும்பம். அவருக்குப்பின் அவரது மகன்களும், மகள்களும் சினிமா துறையில் கொடி கட்டி பறந்து வருகின்றனர். சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகமான நடிகர் ராதா ரவி பல திரைப்படங்களில் வில்லாதி வில்லனாக நடித்து ஆசத்தி வருகிறார். தற்போது இவர் Behindwoods யூட்யூப் சேனலுக்கு, தனது குடும்பம் குறித்து பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார்.

அதில், என்னுடைய மனைவி பெயர் பாக்கியலட்சுமி, எனக்கு ஒரு மகன், ஒரு மகள். என் மகன் ஹரிக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறாள். என் மகளுக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அதில், மூத்தவன் படித்துக் கொண்டிருக்கிறான். இரண்டாவது மகன் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதனால், அவன் அடுத்ததாக சினிமாவில் வரலாம் என்று யோசனை இருக்கிறது ஆனால் காலம் என்ன சொல்லும் என்று தெரியவில்லை. என்னுடைய மருமகன் மிகவும் தன்மையான குணம் கொண்டவர், என்னைப்போல உழைப்பால் உயர்ந்தவர்.

Radha ravi Radhika

ராதா ரவி: என்னுடைய அப்பா நிறைய பெண்களிடம் மிகவும் நெருக்கமாக இருந்தார். அவர்களுக்கு அப்பா வீடுகளையும் வாங்கி கொடுத்து இருக்கிறார். ஆனால், நாங்கள் நெருக்கமாக பழகிக் கொண்டு இருப்பது ஒரு சிலரிடம் மட்டும் தான். இதனால் எங்களுடைய குடும்பம் மிகவும் சிறியது. ஆனால், மொத்த குடும்பத்தையும் சேர்த்தால், எம்எல்ஏ ஆக ஜெயிக்கும் அளவிற்கு ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரு சிலருடன் தான் பழகி வருகிறோம் என்றார். மேலும், நான் சினிமாவிற்கு வரும் போது வெறும் 1500 ரூபாய்க்கு தான் வேலைக்கு வந்தேன். ஆனால், இப்போது என்னுடைய சொத்து மதிப்பு 200 கோடி இருக்கும். ஆனால், சரியாக தெரியவில்லை தோராயமாக இவ்வளவு இருக்கும் என்றார். இதைதொடர்ந்து தொகுப்பாளி, ராதா ரவியிடம் உங்களுக்கும் ராதிகாவிற்கும் என்ன சண்டை என்று கேட்க, நீங்கள் சொல்வது போல சண்டை தான் அந்த கேள்விக்கு நான் பதில் சொல்லவிரும்பவில்லை அந்த பேட்டியில் ராதா ரவி பேசி உள்ளார்.

எதார்த்தமான நடிகர்: மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவுக்கும் தனலட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார் ராதா ரவி, இவருக்கு எம். ஆர். ஆர். வாசு, ரசியா, ராணி, ரதிகலா என்ற சகோதரனும், சகோதரியும் உண்டு. எம்.ஆர்.ராதா மற்றொரு மனைவியான கீதா ராதாவிற்கு பிறந்தவர்கள் ராதிகா, நிரோஷா இவர்கள் இருவரும் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளனர். நடிகர் ராதாரவிக்கு தனது தந்தையை போல சினிமாவில் ஆர்வம் இருந்ததால், ஒன்பதாவது படிக்கும் போதே ஜூலியஸ் சீசராக நடித்தார். இதைத்தொடர்ந்து, கமல் நடித்த மன்மத லீலை படத்தில் ஒரு சிறியரோலில் நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன் பின் டி. ராஜேந்தரரின் உயிருள்ளவரை உஷா என்ற படத்தில் முதன்முதலாக வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்தார். அந்த படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்ட பட்டதைத் தொடர்ந்து, வைதேகி காத்திருந்தாள், உயர்ந்த உள்ளம், சின்னத் தம்பி, உழைப்பாளி, குரு சிஷ்யன் என பல படத்தில் வில்லனாக நடித்து பெயர் எடுத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X