ரஜினி பட நடிகையின் படம் வெளியாவதில் சிக்கல்.. நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு!
சென்னை: பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வரும் ராதிகா ஆப்தே நடித்த 'சாலி மொஹப்பத்' திரைப்படம் கடந்த ஆண்டே தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே. குறிப்பாக இவர். நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்து இயக்கிய 'தோனி' திரைப்படத்தில் மிக முக்கிய ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம், அதிகம் கவனிக்கப்பட்ட நடிகையாக மாறிய ராதிகா ஆப்தே, இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்திக்கு ஜோடியாக 'ஆல் இன் ஆல் அழகு' ராஜா படத்தில் 20 நிமிடம் மட்டுமே தலைகாட்டி இருந்தார். இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக, இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய 'கபாலி' படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ராதிகா ஆப்தேவுக்கு கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்த போதிலும், தமிழ் சினிமா குட்பை சொல்லிவிட்டு, பாலிவுட் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

நடிகை ராதிகா ஆப்தே: தமிழில் இழுத்து மூடிக்கொண்டு, குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் இவர் நடித்தாலும், இந்தியில் மிகவும் கவர்ச்சியான வேடங்களில் நடித்து வருகிறார். நடிகை ராதிகா ஆப்தே நடித்துள்ள 'சாலி மொஹப்பத்' திரைப்படம் கடந்த ஆண்டே தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் தற்போது ஒரு பெரிய அப்டேட்டை கொடுத்துள்ளனர். அதாவது, 'சாலி மொஹப்பத்' விரைவில் ஜீ5 தளத்தில் நேரடியாக வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர். ஆனால், எப்போது ஸ்ட்ரீமிங் ஆகும் என்பதை தெரிவிக்கவில்லை. இந்த படம் ஏற்கனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
12 ஆண்டுக்குபின் தாயானார்: நடிகை ராதிகா ஆப்தேவிற்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அவர் தனக்கு திருமணம் ஆன தகவலை, பல வருடங்களுக்கு பின்னரே வெளியிட்டார். அதன்படி, ராதிகா ஆப்தே கடந்த 2012-ஆம் ஆண்டு பெனெடிக்ட் என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணம் ஆகி 12 வருடங்களுக்கு பின் அவருக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது.


Click it and Unblock the Notifications