சினிமாவில் செம பிஸியான ராதிகா.. அப்போ சீரியல்?
சென்னை: சன் டிவியில் ராதிகா நடித்து வந்த சந்திரகுமாரி சீரியல் ரேட்டிங்கில் இடம் பிடிப்பதில் இழுபறியாக இருந்தது.
இந்த நிலையில் சந்திரகுமாரி சீரியலின் நேரத்தை மாலை 6:30 மணிக்கு மாற்றி கொடுத்தது சன் டிவி.இதை அடுத்து சீரியல் படி சந்திராவாக நடிச்ச ராதிகா காணாமல் போனார்.

திரும்ப சந்திரா கிடைச்ச போது, நடிகை விஜி சந்திரசேகர் சந்திராவாக வந்தார்.இப்போது சந்திரகுமாரி சீரியல் ஏதோ போயிகிட்டு இருக்கு.
இந்த நிலையில் மீண்டும் ராதிகா பிரமாண்டமாக தயாராக இருக்கும் வேறு சீரியலில் நடிச்சு மீண்டும், சன் டிவியில் இரவு 9:30 மணி நேரத்தை பிடிப்பார்னு தகவல்கள் கசிந்து வருது.
இப்போது ராதிகா சினிமாவில் அதிகம் கவனம் செலுத்திட்டு வர்றார். இப்போதே ராதிகா கால்ஷீட் கிடைக்காத அளவுக்கு பிஸி ஆகிட்டாராம். இயக்குநர் ராஜேஷ் இயக்கி, சிவ கார்த்திகேயன் நடிக்கும் மிஸ்டர் லோக்கல் முதல் நாள் ஷூட்டிங் ராதிகாவின் டேட் கிடைக்காததால் தள்ளிப் போனதாகவும் சொல்றாங்க.
மோகன்லால் படத்தில் ராதிகா நடிச்சுட்டு இருக்கறதுனால, குறிப்பிட்ட நாளில் ராதிகாவால் வர முடியலியாம். ஒருவழியாக கடந்த சனிக்கிழமை ராதிகா வந்துவிட, உடனே ஒரு நாள் ஷூட்டிங் முடிச்சு ராவோடு ராவாக எடிட்டிங் இசை சேர்த்து சென்சாருக்கு விண்ணப்பித்து இருக்காராம் ராஜேஷ்.
இப்படி சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருவதால் நிற்க நேரமின்றி இருக்கும் ராதிகா மறுபடியும் எப்போது சின்னத் திரைக்கு வருவார் என்று தெரியாமல் இருந்தாலும், சீரியல் விரும்பிகளின் எதிர்பார்ப்பு என்னவோ ராதிகா மீண்டும் சின்னத் திரைக்கு வருவார் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











