Market Raja MBBS: அப்படிப்போடு! லேடி டானாக நடிகை ராதிகா!
சென்னை: 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' திரைப்படத்தில் டாம்பீகமான லேடி டானாக ராதிகா சரத்குமார் பட்டாளம் சுந்தரிபாய் பாத்திரத்தில் நடிக்கிறாராம்.
காதல் மன்னன்,அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன் போன்ற பிரமாண்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் சரண் இந்த படத்தை இயக்குகிறார்.
பிக்பாஸ் முதல் சீசன் வெற்றி கண்டஸ்டன்ட்டான ஆரவ் அம்மாவாக ராதிகா டான் வேடத்தில் நடிக்கிறாராம்.

நடிகை ராதிகா
லேடி டானாக டாம்பீகமாக ராதிகா இந்த படத்தில் நடிக்க உள்ள நேரத்தில், அவருக்கு எதிரான லதாம்மா என்ற காது கேட்காத வாய் பேசாத ஒரு ஆழமான அம்மா வேடத்தில் ரோகிணி நடிக்கிறாராம்.

அம்மா உணவகம்
ரோகிணியிடம் கதையை விவரிக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் அவர் தன்னை அந்த லதாம்மாவாகவே நினைக்க தொடங்கி விட்டார். அவருடனான உரையாடல்கள் ,காட்சி விவரங்களைக் கூட அதன் பின் சைகை மொழியிலேயே என்னை சொல்ல கேட்டுக்கிட்டார். அப்போதுதான் அந்த கதாபாத்திரம் தன் மனதில் ஆழமாகப் பதியும் என்று ரோகினி சொன்னாராம்.

எப்போதும் ரிகர்சல்
ரோகினி ஆரம்பிச்ச இந்த விஷயம் இப்போது கதாநாயகன் ஆரவ் மற்றும் புதுமுகம் விஹான் ஆகியோருக்கும் சேர்த்து பயிற்சி கொடுக்கும் பட்டறையாக இந்த படம் நன்றாக வரவேண்டும் என்கிற நல்ல நோக்கில் செயல்பட்டு வருகிறது என்று சரண் கூறுகிறார். அதாவது ஆரவ், கதாநாயகி, ரோகினி போன்றவர்கள் எப்போதும் தாங்கள் நன்றாக நடிக்க வேண்டும் என்று ரிகர்சலில் இருக்கிறார்களாம்.

கண் முன் நிறுத்தினார்
படப்பிடிப்பின் போது அம்மா உணவகத்தில் பணி புரியும் ஒரு மாற்றுத் திறனாளி பெண்ணை எங்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் ரோகிணி!
ஒவ்வொரு நாள் படப்பிடிப்பின் போதும் காட்சி முடிந்தவுடன் கூட அவர் அதிலிருந்து சகஜ நிலைக்குத் திரும்ப பல மணி நேரம் பிடித்தது!
படத்தை திரையில் காணும் போதும் பார்வையாளர்கள் அதே விதமான உணர்ச்சிக்கு ஆட்படுவார்கள் என்பது ஒரு இயக்குநராக என் அசைக்க முடியாத நம்பிக்கை என்று கூறி உள்ளார் சரண்.

ரோகிணி நடிகை
நடிகை ரோகிணி எந்த கிசு கிசுவிலும் மாட்டிக்கொள்ளாதவர்.நல்ல நடிகை என்றாலும், இவருக்கு சரியான வாய்ப்புக்கள் அமையவில்லை. இவரின் குரல் நடிகர் கமல்ஹாசனுக்கு .ரொம்ப பிடிக்கும்.அவர் எடுக்கும் பல படங்களில் நடிகைகளுக்கு ரோகிணி டப்பிங் கொடுத்து இருக்கார். பாலு மகேந்திராவின் மறுபடியும்...நடிகர் கமல்ஹாசன் தயாரித்த மகளிர் மட்டும் மாதிரி இன்னும் இவருக்கு புகழ் சேர்ப்பது மாதிரி எந்த படமும் அமையவில்லை.


Click it and Unblock the Notifications











