»   »  மகள் ரேயானுக்கு நாளை திருமணம்... ஆனாலும் அம்மா ராதிகா ரொம்ப பிஸி

மகள் ரேயானுக்கு நாளை திருமணம்... ஆனாலும் அம்மா ராதிகா ரொம்ப பிஸி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ராதிகாவின் மகள் ரேயான், கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுன் திருமணம் நாளை நடைபெற உள்ளது. திருமண வேலைகளில் பிசியாக இருந்தாலும், கூடாவே வாணி ராணி சீரியல் டப்பிங் வேலையிலும் ரொம்ப பிசியாக இருக்கிறார் ராதிகா.

பெங்களூருவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்பு மிதுனுடன் ராதிகாவின் மகள் ரேயானின் நிச்சயதார்த்தம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெகு விமர்சையாக நடந்தது.

Radhika busy with Rayane wedding and Vani Rani Dubbing

அபிமன்யு மிதுன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியில் விளையாடினார். தற்போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். ராதிகாவின் மகள் ரேயான் ராடான் மீடியா நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.

Radhika busy with Rayane wedding and Vani Rani Dubbing

நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

Radhika busy with Rayane wedding and Vani Rani Dubbing

நாளை திருமண நிகழ்ச்சியானது பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளில் பரபரப்பாக உள்ள திருமண வீட்டார்.

மகளின் திருமணத்திற்காக ரொம்ப பிஸியாக வேலை செய்தாலும் வாணி ராணி சீரியல் டப்பிங் வேலையிலும் பிசியாக உள்ளார் ராதிகா.

Radhika busy with Rayane wedding and Vani Rani Dubbing

மெகந்தி விழா முடிந்த கையோடு டப்பிங் செய்ய தொடங்கிவிட்டதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராதிகா.

Radhika busy with Rayane wedding and Vani Rani Dubbing

English summary
Radhika daughter Rayanne wedding on 28th august. Radikaa twitted in her page, it all this busy and crazy times, dubbing Vani Rani.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil