வாணி ராணியில் இரட்டை வேடத்தில் அசத்தும் ராதிகா!

By Mayura Akilan

சன் தொலைக்காட்சியில் 'வாணி ராணி' புதிய தொடர் ஆரம்பமாகியுள்ளது. இதுவரை 6 எபிசோடுகள் முடிந்துள்ளன. சீரியல் நல்லா இருக்கே. இப்பதான் பழைய ராதிகாவை பாக்க முடியுது என்ற பேச்சு எழுந்துள்ளது.

இந்த தொடரில் இரட்டை வேடத்தில் அக்கா தங்கையாக நடித்துள்ளார் ராதிகா. போல்டான கேரக்டரில் வாணியாகவும், வெகுளியான கதாபாத்திரத்தில் ராணியாகவும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

ராதிகாவின் வெகுளித்தனமான நடிப்பு ஒரு சில ரசிகர்களுக்கு பிடிக்கும் என்றால் அவரின் போல்டான கேரக்டர் பெருவாரியான ரசிகர்களுக்கு பிடிக்கும். இந்த தொடரில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் சீரியலை கொண்டு செல்கிறார்.

அக்கா, தங்கை பாசம்

அக்கா, தங்கை பாசம்

வேணு அரவிந்த், பப்லு அண்ணன் தம்பிகள். அவர்களின் மனைவிகளாக வாணி, ராணி. வாணிக்கு இரண்டு பையன்கள். தங்கை ராணிக்கு இரண்டு பெண் ஒரு பையன்.

கூட்டுக்குடும்ப வாழ்க்கையை அழகாக எடுத்துக்காட்டும் தொடர். இதில் அக்கா தங்கை பாசத்தை மையப்படுத்தியிருக்கிறார் ராதிகா. அண்ணன் வேணு அரவிந்துக்கு தம்பி பப்லு மீது அவ்வளவாக பிடிப்பு இல்லைதான் என்றாலும் அக்கா தங்கைகளின் பாசத்தில் ஒரு ஒட்டுதல் இருக்கிறது.

கூட்டுதான் ருசிக்கும்

கூட்டுதான் ருசிக்கும்

அக்கா தங்கச்சிங்க அண்ணன் தம்பிகளை கட்டிக்கிட்டா கூட்டு குடும்பமாகத்தான் இருக்கணுமா என்று மகள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லும் ராணி, தனியாக இருக்கும் பொரியலை விட கூட்டாக குழைந்து இருக்கும் காய்க்குதான் ருசி அதிகம் என்று கூறி அப்ளாஸ் வாங்குகிறார்.

இதெல்லாம் சகஜம்

இதெல்லாம் சகஜம்

கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் சின்னச் சின்ன பிரச்சினைகள், இதிலும் உண்டு. அதையும் சமாளித்து சந்தோசமாக குடும்பத்தை நடத்தும் இல்லத்தரசியாக ராணி மிளிர்கிறார்.

அதே கம்பீரம்

அதே கம்பீரம்

வழக்கறிஞராக வரும் வாணி, தன் குடும்பத்தில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் எப்படி இருக்கவேண்டும் என்பதை கம்பீரமாக உணர்த்துகிறார். தவறு செய்வது கணவனாகவே இருந்தாலும் அதை தட்டிக் கேட்கத் தயங்குவதில்லை.

சரியான ஜோடிப்பொருத்தம் இருக்கலாமே?

சரியான ஜோடிப்பொருத்தம் இருக்கலாமே?

வாணி, ராணி என இரண்டு கதாபாத்திரங்களில் கம்பீரமாக வலம் வரும் ராதிகா தனக்கான ஜோடிப் பொருத்தம் இன்னமும் சரியாக தேர்ந்தெடுத்திருக்கலாம் என்கின்றனர். பப்லுவோ, வேணு அரவிந்தோ மேட்ச் ஆகலையே. அடுத்த சீரியலிலாவது இதை சரி செய்து கொள்வார் என்று நம்பலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X