வரப் போறேன்.. புதுஸ்ஸா.. கெத்தா.. மெகா பிளான் ரெடியாய்ட்டிருக்கு.. ராதிகா அறிவிப்பு!
சென்னை: ராதிகா இதோ மீண்டும் டிவிக்கு வரப் போகிறார். இதை அவரே சொல்லியுள்ளார்.
ராதிகாவுக்கும், சன் டிவிக்கும் இடையிலான தொடர்பு, உறவு என்பது சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான உறவு போல. பிரிக்க முடியாதது. ஆனால் அதிலும் ஒரு விரிசல் விழுந்தது.
ராதிகாவுக்கும், சேனலுக்கும் இடையே ஏதோ பிரச்சினை போல. இதனால் அவர் தயாரித்து நடித்து வந்த சந்திரகுமாரி சீரியலின் நேரம் அதிரடியாக மாலைக்கு கொண்டு போகப்பட்டது. இதனால் கோபமடைந்த ராதிகா, அந்தத் தொடரில் நடிக்காமல் விலகினார்.

சொதப்பல் சந்திரகுமாரி
ராதிகா நடித்த வேடத்தில் விஜி சந்திரசேகர் நடித்தார். ஆனால் படு சொதப்பலாக போய் சீரியலே காலியாகிப் போனது. இதனால் ராதிகா மீண்டும் சன் டிவி பக்கம் வருவாரா, நடிப்பாரா என்ற கேள்விகளும் எழுந்தன.
ரசிகர்கள் குஷி
பலரும் ராதிகாவை தொடர்ந்து நடிக்க அழைத்து வந்த நிலையில் தற்போது படு உற்சாகமாக ஒரு டிவீட் போட்டுள்ளார் கலையரசி ராதிகா. அந்த டிவீட் ராதிகா ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

நன்றிகள் டிவீட்டுகளுக்கு
ராதிகா போட்டுள்ள டிவீட்டில், அனைவரது டிவீட்டுகளுக்கும் எனது நன்றிகள். விரைவில் டெலிவிஷனுக்கு வர வேண்டும் என்று அனைவரும் அழைத்து வருகிறீர்கள். விரைவில் அறிவிப்பேன். சில திட்டமிடல்கள் உள்ளன. மிகப் பெரிய பொழுது போக்குக்கு அவை உறுதி செய்யும். நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் ராதிகா.

எதிர்பார்ப்பு அள்ளுதே
ராதிகா சொல்வதைப் பார்த்தால் ஏதோ ஒரு பெரிய மெகா திட்டத்தை அவர் கையில் எடுத்திருப்பதாக தெரிகிறது. ஆனால் என்ன திட்டம் என்றுதான் தெரியவில்லை. இருப்பினும் ரசிகர்களை பெரிய அளவில் குஷிப்படுத்தப் போகிறார் ராதிமா என்று மட்டும் தெரிகிறது.
பிறகென்ன காத்திருப்போம். கலகலப்பான பொழுது போக்கைப் பார்த்து ரசிப்பதற்கு.


Click it and Unblock the Notifications











