வாணி ராணி சீரியல் முடிந்தபோது நிம்மதியாக இருந்தது: ராதிகா சரத்குமார்
Recommended Video

சென்னை: வாணி ராணி சீரியல் முடிந்த போது நிம்மதியாக இருந்ததாக ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளாக ஒளிபரப்பான வாணி ராணி தொலைக்காட்சி சீரியல் கடந்த வாரம் முடிந்தது. இதையடுத்து ராதிகா சரத்குமார் நடிப்பில் சந்திரகுமாரி சீரியல் துவங்கியுள்ளது.
இந்நிலையில் வாணி ராணி, சந்திரகுமாரி பற்றி ராதிகா கூறியதாவது,

வாணி ராணி
நான் இந்த சீரியலில் 6 ஆண்டுகள் நடித்துள்ளேன். தற்போது நான் எங்காவது வெளியே சென்றால் என்னை பார்க்கும் மக்கள் கேட்கும் முதல் கேள்வி, வாணி ராணி சகோதரிகளை மீண்டும் எப்பொழுது பார்ப்போம் என்பது தான். அது தான் அந்த சீரியலின் வெற்றி. என் கெரியரிலேயே வாணி ராணி கதாபாத்திரங்கள் தான் மிகவும் சவாலானவை.

ராதிகா
படங்களில் இரட்டை வேடத்தில் நடித்தால் கதாபாத்திரங்களை புரிந்து கொண்டு நடிக்க நேரம் இருக்கும். ஆனால் சீரியலில் நேரமே இருக்காது. அனைத்து காட்சிகளையும் நினைவில் கொண்டு வசனங்களை பேச வேண்டும். நான் அந்த சீரியலை தயாரித்ததுடன், கிரியேட்டிவ் பணிகளையும் பார்த்ததால் மிகவும் சவாலாக இருந்தது. நான் பல விஷயங்களை கவனிக்க வேண்டி இருந்தது.

நிம்மதி
நான் வாணி ராணி சீரியலில் நடித்துக் கொண்டே படங்கள், சந்திரகுமாரி என்று பிசியாக இருந்தேன். இரவும், பகலும் வேலை பார்த்தேன். அதனால் அந்த சீரியல் முடிந்தபோது நிம்மதியாக இருந்தது. 7 ஜென்மம் உண்டு என்பார்கள். அந்த கான்செப்டில் தான் சந்திரகுமாரி எடுக்கப்படுகிறது. இந்த சீரியலில் நான் 7 கதாபாத்திரங்களில் வருகிறேன்.

சந்திரகுமாரி
ஒரு சீரியலை துவங்குவது தான் பெரிய வேலை ஆகும். தற்போது சந்திரகுமாரி சீரியல் துவங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. இந்த சீரியல் ரசிகர்கள் அனைவருக்கும் புது அனுப
வமாக இருக்கும். நான் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவுடன் படங்களில் வேலை செய்தது இல்லை. தற்போது சந்திரகுமாரி சீரியலில் தான் சேர்ந்து வேலை செய்கிறோம். சந்திரகுமாரி சீரியலில் குறிப்பிட்ட பகுதியை நீங்கள் தான் இயக்க வேண்டும் என்று நான் அவரிடம் கூறியபோது உடனே ஒப்புக் கொண்டார். அவருக்கு டிவி பற்றி தெரியும். அது ஒரு பிளஸ் ஆகும் என்று ராதிகா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











