Don't Miss!
- Technology
வெயிட்டான பெர்ஃபார்மென்ஸ் + தரமான கேமரா! இந்த Phone தான் பெஸ்ட் சாய்ஸ்!
- Sports
"சூர்யகுமார் ஒன்றும் அவ்வளவு பெரிய வீரர் இல்லை".. பாக். முன்னாள் வீரர் தாக்கு.. காரணம் பாண்டிங் தான்
- Lifestyle
உங்க கண்களில் இந்த மாதிரி அறிகுறி இருந்தா... அது மாரடைப்பை ஏற்படுத்தும் பிபியோட அறிகுறியாம்..!
- News
எடப்பாடிக்கு அடி மேல் அடி.. அதிமுக அலுவலக சாவியும் கையை விட்டுப் போகுமா? - வந்த ‘நெகட்டிவ்’ சிக்னல்!
- Finance
ஒரு மீல்ஸ் விலை 42% உயர்வு.. மக்களை பந்தாடும் விலைவாசி உயர்வு..!
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Automobiles
மோதி பாத்திருவோம்... டாடாவின் வயிற்றில் புளியை கரைக்கும் மாருதி ஆல்டோ கார்! புதிய அவதாரத்தில் நாளைக்கு லான்ச்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
உங்க அம்மாவை கோபி டைவர்ஸ் செய்யப் போறாரு.. எழிலிடம் பற்றவைத்த ராஜேஷ்.. அடுத்தது என்ன?
சென்னை : விஜய் டிவியின் பிரபலமான சீரியலாக பாக்கியலட்சுமி மாறியுள்ளது.
இந்த தொடரில் அடுத்தடுத்த பரபரப்பான திருப்பங்கள் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறது.
இந்நிலையில் ராதிகா மற்றும் தனது அப்பா குறித்த வீடியோவை பார்க்கும் எழில் செய்வதறியாமல் திகைக்கிறார்.
Top 5 நடிகர்கள் லிஸ்ட்.. ஸ்ட்ராங்காக உட்கார்ந்த சிவகார்த்திகேயன்.. யாரு பாராட்டியிருக்காங்க பாருங்க!

விஜய் டிவி
விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் மட்டுமில்லாமல் சீரியல்கள் மூலமும் சிறப்பாக கல்லா கட்டி வருகிறது. இந்த சேனலின் அடுத்தடுத்த சீரியல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. புதிய தொடர்கள் மட்டுமில்லாமல் ஏற்கனவே சிறப்பாக ரசிகர்களை கவர்ந்த சீரியல்களின் அடுத்தடுத்த சீசன்களையும் விஜய் டிவி ஒளிபரப்பி வருகிறது.

பாக்கியலட்சுமி தொடர்
இந்த அனைத்துத் தொடர்களும் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுத்து வருகின்றன. ஆனாலும் முதல் மூன்று இடங்களை பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் பிடித்துள்ளன. இதில் சிறப்பான மற்றும் பரபரப்பான எபிசோட்கள் மூலம் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறது பாக்கியலட்சுமி.

முக்கியமான 3 கேரக்டர்கள்
இந்தத் தொடரில் கோபி மற்றும் அவரது மனைவி பாக்கியா, காதலி ராதிகா இவர்களை சுற்றிதான் கதைக்களம் இருந்தாலும் இவர்களின் உறவுச் சிக்கல்களை மிகவும் சிறப்பாக காட்சிப்படுத்தி வருகிறார் இயக்குநர். ராதிகா மற்றும் பாக்கியா இருவரையும் ஏமாற்றிவந்த கோபி சிக்குவாரா என்ற கேள்வி எழுந்தது.

ராதிகாவிற்கு தெரியவந்த உண்மை
இந்நிலையில் தற்போது அவரது குட்டு ராதிகாவிடம் உடைந்துள்ளது. அவர் தற்போது தன்னுடைய மகளுடன் மும்பைக்கு செல்ல திட்டமிடுகிறார். தன்னை திருமணம் செய்துக் கொள்ள வற்புறுத்தும் தனது அண்ணனிடம் தன்னால் அது முடியாது என்று கூறுகிறார். இதனிடையே அங்கு வரும் கோபி, தன்னை ஏற்கும்படி ராதிகாவிடம் கூறுகிறார்.

கண்டிப்பு காட்டும் ராதிகா
அது தன்னால் முடியாது என்று கண்டிப்பாக கூறுகிறார் ராதிகா. தொடர்ந்து தன்னுடைய மகளை மும்பைக்கு செல்ல தயாராகும்படி கூறுகிறார். ஆனால் அவர் மும்பைக்கு வரமுடியாது என்று கூற, ஒரு கட்டத்தை அவரை ராதிகா அறைந்து விடுகிறார். இதையடுத்து அங்கு வரும் ராதிகாவின் அம்மா அவரை பதிலுக்கு அறைகிறார்.

கோபி வீட்டிற்கு சென்ற ராஜேஷ்
இந்நிலையில் ராதிகாவின் கணவன் ராஜேஷ், கோபி வீட்டிற்கு சென்று தன்னுடைய மனைவி மற்றும் தன்னுடைய வாழ்க்கையை கோபி சீரழித்து வருவதாக குற்றம் சாட்டுகிறார். ராஜேஷை பார்க்கும் கோபியின் அப்பா மற்றும் எழில் அவரை வெளியில் துரத்த ஆவேசமாக முயல்கின்றனர்.